- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேர பௌர்ணமி வழிபாடு

பணம் சேர பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையும் சமாளிக்கும் நம்மால், பண பிரச்சனைகளை மட்டும் அவ்வளவு எளிதாக தீர்த்துவிட முடிவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஜோதிட சாஸ்திர கட்டத்தின்படி தான் இல்லத்தில் பண நெருக்கடியும், பொருளாதார ரீதியான பிரச்சினைகளும் உண்டாகும். இதிலிருந்து மீண்டு பணவரத்தும், செல்வ வளமும் சிறக்க பௌர்ணமி தோறும் செய்ய வேண்டிய எளிய வழிபாடு முறையை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த பிரபஞ்சத்தில் பௌர்ணமி அன்று நல்ல தெய்வங்களின் சக்திகள் அதிகரித்து, அவர்களின் கை ஓங்கி இருக்கக்கூடிய அற்புதமான ஒரு நாளாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அனைத்து தேவர்களின் ஆசிர்வாதமும் இந்த தினத்தில் மனிதர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பௌர்ணமி தோறும் முக்கியமான பரிகாரங்களும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் தெய்வங்களுக்கு நடத்தப்படுகிறது.

- Advertisement -

இந்த நாளில் விநாயகரையும், சந்திர பகவானையும் சத்திய நாராயணர் மற்றும் சித்ரகுப்தரையும் வழிபட்டால் முன்வினை பாவங்கள் அகழும். ஜாதக விளைவுகள், ஜோதிட சூத்திரங்களின் எதிர்மறை பலன்களையும் நீக்கி, நமக்கு சரியான வழியை காண்பிக்கக் கூடிய அற்புதமான வரங்களை கொடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. பௌர்ணமி நாளில் அதிகாலையில் இருந்து விரதம் இருந்து, எளிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.

அன்றைய நாளில் புத்தம் புதிய மலர்களால் உங்களுக்கு பிடித்த தெய்வம் அல்லது குலதெய்வத்தை அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் இனிப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் செய்யுங்கள். பால் போன்ற நிலவின் ஒளியை பிரதிபலிக்க, பால் ஒரு டம்ளர் அளவிற்கு வையுங்கள். பின்னர் இரண்டு மண் அகல் விளக்குகளில் சுத்தமான பசு நெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள்.

- Advertisement -

கலப்படங்கள் இல்லாத பொருட்களை பார்த்து வாங்குங்கள். பூஜைக்கு உரியது பரிசுத்தமானதாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் நம் வேண்டுதல்களும் பலிக்கும் எனப்படுகிறது. பாலில் சந்திர பகவானின் அருள் கிடைக்கும். இந்த பாலில் சிறிதளவு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும். பின்னர் இரவு சந்திரன் உதயம் ஆனதும், உங்கள் விரதத்தை நிறைவு செய்து, அந்த பாலை வீட்டில் இருக்கும் அனைவர்களுக்கும் பருக கொடுக்கலாம்.

நெய் தீபம் ஏற்றி வைத்து, தாமரை தண்டு திரி போட்டு மகாலட்சுமியையும், சந்திர அம்சமுடைய எல்லா கடவுள்களையும் வணங்கி, வேண்டுதல் வைக்கும் பொழுது நம் முன்வினை பாவங்கள் யாவும் நீங்கி, ஜோதிடத்தால் வரக்கூடிய தோஷங்களும் விலகி, சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த எளிய வழிபாடு முறையை பௌர்ணமி தோறும் கடைபிடித்து வருபவர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். தீராத பண கஷ்டங்கள் தீர்ந்து, செல்வ வளம் கொழிக்க துவங்கும்.

இதையும் படிக்கலாமே:
சனி மஹா பிரதோஷம் இரவு பரிகாரம்

தொழில் ரீதியான பிரச்சினைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். அன்றைய நாளில் யாராவது ஒருவருக்காகவே அன்னதானம் செய்வது நல்லது. பசியில் வாடும் ஏழை ஒருவருக்கு அன்னத்தை தானம் செய்தால், அதைவிட சிறந்த பரிகாரம் இருந்து விட முடியாது. முடிந்தால் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு வெண்பொங்கல் நெய்வேதியம் செய்து, மாலை வேளையில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யுங்கள்.

சற்று முன்