இன்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. சனி மஹா பிரதோஷமும் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாள் அதிசக்தி வாய்ந்த நாள். இந்த நாளில், உங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும், கடன் சுமையிலிருந்து வெளி வரவும், இதுவரை எந்த பரிகாரமும் செய்யவில்லை என்றால், மீதம் இருக்கக்கூடிய இந்த இரவு நேரத்தை பயன்படுத்திக்கோங்க.
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த ஒரு பரிகாரத்தை செய்து விடுங்கள். இந்த ஒரு பரிகாரம் கடன் சுமையையும் தீர்க்கும். வருமானத்தையும் பல மடங்கு பெருக்கிக் கொடுக்கும்.
சனி மஹா பிரதோஷம் இரவு பரிகாரம்
இன்று இரவு வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விடுங்கள். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும், தூங்க செல்வதற்கு முன்பு, இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரம் செய்ய 2 பொருள் நமக்குத் தேவை. 3 கிராம்பு, 3 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு எண்ணிக்கைக்காக தான் சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் அதிகபட்சம் எத்தனை மிளகு, எத்தனை கிராம்பு எடுத்துக் கொண்டாலும் அது உங்களுடைய விருப்பம். இந்த இரண்டு பொருட்களையும் கற்பூர நெருப்பில் போட்டு எரித்து பொசுக்க வேண்டும். அதற்காக ஒரு சின்ன துண்டு கட்டி கற்பூரம் தேவை. அது பச்சை கற்பூரமாக இருந்தாலும் சரி, சாதாரணமா சூடம் இருந்தாலும் சரி.
இன்றைய நாளில் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஈசனின் அருளும் அந்த பெருமாளின் அருளும் நிரம்பி இருக்கிறது, எல்லோரும் சிவனை கும்பிடுவீங்க, எல்லோரும் பெருமாளை கும்பிடுவீங்க. இந்த இரண்டு வகையான நேர்மறை பிரார்த்தனைகளும் உங்களை சுற்றி இருக்கும். ஆகவே கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் வாழ்வில் நல்லது நடக்கும்.
இந்த பரிகாரத்தை உங்கள் வரவேற்புறையிலேயே செய்யலாம். கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளம் கைகளில் மிளகு கிராம்பு 2 பொருளையும் எடுத்துக்கொண்டு, உங்களுடைய தலையை வலது பக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை, உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி ஒரு மண் அகல் விளக்கில் கற்பூரம் வைத்து ஏற்றி இந்த கையில் இருக்கும் மிளகு கிராம்பையும் அந்த நெருப்பில் போட்டு பொசுக்கி விட வேண்டும்.
அது பட்டு பட்டென்று வெடிக்கும். அந்த சமயத்தில் அந்த கிராம்பும் மிளகும் நெருப்பில் பஸ்பமாகும் நேரத்தில் இந்த பிரபஞ்சத்திடம், சிவபெருமானிடம் விஷ்ணுவிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது உங்களுக்கு கிடைக்கும். அந்த நெருப்பில் உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம், அந்த நிமிடத்தோடு பொசுங்கி விட்டதாக மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.
இனிமேல் எனக்கு நல்ல காலம் தான். கடன் சுமை குறைந்துவிடும். வருமானம் பல மடங்கு பெருகும் நஷ்டம் எல்லாம் லாபமாக மாறும் என்று பிராத்தனை செய்து விட்டு அந்த நெருப்பு எறிந்து முடிந்தவுடன் முகம் கை கால்களை கழுவிக்கொண்டு, தூங்கச் செல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: இன்று சனி மகா பிரதோஷம் கடன் தீர மந்திரம்
அந்த சாம்பலை எடுத்து கால் படாத இடத்தில் அடுத்த நாள் கொட்டி விடலாம். இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை இன்று இரவு செய்தால் நிச்சயம் வாழ்நாள் துன்பங்கள் சுலபமாக விலகும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.