- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய தடையை நீக்கும் தேய்க்கிறை சஷ்டி வழிபாடு

காரிய தடையை நீக்கும் தேய்க்கிறை சஷ்டி வழிபாடு

- Advertisement -

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சஷ்டி நாளன்று நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் காரியத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காரிய தடையை நீக்கும் முருக வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காரிய தடையை நீக்கும் வழிபாடு

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி நாளில் பலரும் விரதம் இருந்து முருகப்பெருமானிடம் தங்களுடைய வேண்டுதல்களை முன் வைப்பார்கள். அப்படி முன்வைக்கக்கூடிய வேண்டுதல்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக தான் குழந்தை பாக்கியம் திகழ்கிறது. இந்த குழந்தை பாக்கியம் தொடர்பான வேண்டுதலை முன் வைப்பதற்கு வளர்பிறை சஷ்டி உகந்ததாக கருதப்படுகிறது. அப்படி என்றால் தேய்பிறை சஷ்டி நாளில் நாம் எந்த வழிபாட்டை செய்யலாம் என்ற கேள்வி எழும் அல்லவா? நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திதியாக தான் தேய்பிறை சஷ்டி திதி திகழ்கிறது. அந்த நாளில் காரிய தடையை நீக்குவதற்கு மிகவும் எளிமையான முறையில் ஒரு வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

தேய்பிறை சஷ்டி நாள் அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு மேல் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஆறு அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனையில் ஏதாவது ஒரு பிரச்சனையை மனதார நினைத்து அது விரைவில் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். ஆறு தீபங்கள் ஏற்ற இயலாதவர்கள் ஒரே ஒரு நீதிபதியாவது ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு வேண்டி முடித்த பிறகு முருகப்பெருமானுக்கே உரித்தான கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். படிக்கத் தெரியாதவர்கள் அந்த கந்த சஷ்டி கவசத்தை மனதார கேட்க வேண்டும். இவ்வாறு கந்த சஷ்டி கவசத்தை நாம் பாடும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ நம்முடைய கையில் பச்சை குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பச்சை குங்குமத்தை வலது கையில் வைத்துக்கொண்டு பிறகு முருகப்பெருமானை மனதார நினைத்து கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும்.

- Advertisement -

கந்தசஷ்டி கவசத்தை படித்து முடித்த பிறகு இந்த பச்சை குங்குமத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்ய போவதாக இருந்தாலும் அதற்கு முன்பாக இந்த பச்சை கற்பூரத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி வெற்றிகள் உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே: கோடி கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த சஷ்டி திதியில் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை முழுமனதோடு இப்படி படிப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய காரிய தடைகள் அனைத்தும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்