- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐப்பசி மூன்றாம் பிறை வழிபாடு

ஐப்பசி மூன்றாம் பிறை வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் எப்படி சந்திர பகவானை நாம் வழிபாடு செய்கிறோமோ அதே போல் அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாம் பிறை அன்றும் நாம் சந்திர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளில் சந்திர தரிசனத்தை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு எண்ணில் அடங்காத நற்பலன்கள் உண்டாவதோடு அவர்கள் வாழ்க்கையில் எந்தவித குறையும் இல்லாமல் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மூன்றாம் பிறையானது ஐப்பசி மாதத்தில் கரிநாளுடன் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு கடன் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐப்பசி மூன்றாம் பிறை வழிபாடு

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய கரிநாளில் நாம் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அந்த கடன் விரைவில் தீரும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த முறை மூன்றாம் பிறையுடன் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டு முறை நம்முடைய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பணவரவை அதிகரித்து தரும் என்று கூறலாம். அப்படிப்பட்ட வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு செய்ய வேண்டும். பூஜை அறையில் ஒரு தட்டை வைத்து, அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு நன்றாக பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் மேற்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி மற்றும் வெல்லத்தை ஒன்றாக கலந்து நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த நேரத்தில் சந்திர தரிசனத்தை காண இயலுமோ அந்த நேரத்தில் வெட்டவெளிக்குச் சென்று சந்திர தரிசனத்தை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது கையில் ஏதாவது ஒரு பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாதம் அடை மழை காலம் என்பதால் மேகங்களின் காரணமாக சந்திர தரிசனத்தை செய்ய இயலாமல் போக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் மானசீகமாக சந்திரனை தரிசனம் செய்வது போல் அந்த தீபத்திற்கு முன்பாகவே அமர்ந்து கொண்டு கையில் பணத்தை வைத்துக்கொண்டு “ஓம் சந்திரமௌலீஸ்வராய நம” என்னும் மந்திரத்தை 27 முறை கூற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு கூறி முடித்துவிட்டு நாம் நெய்வேத்தியமாக வைத்திருந்த பச்சரிசி வெல்லத்தை எடுத்து நம் வீட்டை சுற்றிலும் தூவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பச்சரிசியையும் அந்த இனிப்பையும் எறும்புகள் உண்ண ஆரம்பிக்கும். பச்சரிசி என்பது சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த ஒன்று சந்திர பகவானுக்குரிய மூன்றாம் பிறை நாளன்று எறும்புகளுக்கு பச்சரிசியை நாம் தானமாக தருவதன் மூலம் நாம் என்ன வேண்டுதலை முன்வைக்கிறோம் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதனால் கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று வேண்டுதலை முன்வைத்து கையில் இருக்கக்கூடிய பணத்தை பத்திரமாக ஒரு கவரில் போட்டு வைக்க விரைவிலேயே கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பணவரவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி இரண்டாம் நாள் வழிபாடு

சக்தி வாய்ந்த இந்த மூன்றாம் பிறை வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீருவதோடு பண வரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்