- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனிக்கிழமை கூட சேர்ந்து வரும் ஏகாதசி வழிபாடு

சனிக்கிழமை கூட சேர்ந்து வரும் ஏகாதசி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த மாதத்திற்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில் நவம்பர் மாதத்தின் முதல் நாள் என்பது சனிக்கிழமை அன்று பிறக்கிறது. மேலும் அன்றைய தினம் ஏகாதசி திதியும் சேர்ந்து வருகிறது. அதனால் நவம்பர் மாதத்தின் முதல் நாளே பெருமாளுக்கு உரிய சிறப்பு மிகுந்த நாளாக அமைவதால் அன்றைய தினத்தில் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு அந்த மாதம் முழுவதும் பெருமாளின் அருளை பெற முடியும். அப்படிப்பட்ட பெருமாள் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனிக்கிழமை ஏகாதசி வழிபாடு

நவம்பர் மாதம் என்பது தமிழ் மாதத்தில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதம் இரண்டும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான மாதமாக திகழக்கூடியது. அதனால் இந்த மாதத்தில் பலரும் கார்த்திகை ஒன்றாம் தேதி சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வார்கள். அதே போல் இந்த ஐப்பசி மாதத்தில் நவம்பர் மாதத்தில் தான் சிவபெருமானுக்குரிய அன்னாபிஷேகமும் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நவம்பர் மாதத்தின் முதல் நாளே பெருமாளுக்கு உரிய அற்புதமான நாளாக திகழ்வதால் இந்த நாளை நாம் சிறப்பாக வழிபாடு செய்ய செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

- Advertisement -

நவம்பர் மாதத்தின் முதல் நாள் சனிக்கிழமை அன்று பிறக்கிறது. அன்றைய தினம் ஏகாதசி திதி வருகிறது. இந்த நாளில் நாம் கண்டிப்பான முறையில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். விரதங்களிலேயே மிகவும் உகந்த சிறந்த விரதமாக திகழ்வது ஏகாதசி விரதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெருமாளை வழிபாடு செய்யக்கூடிய ஒவ்வொரு நபர்களும் சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள் என்பதையும் நாம் அறிந்திருப்போம்.

இந்த இரண்டும் சேர்ந்து வரக்கூடிய அற்புதமான நாளன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து வீட்டு பூஜையறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக மூன்று அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு பிரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு பெருமாளின் படத்திற்கோ, சிலைகோ துளசி மாலையை சாற்றி, வாசனை மிகுந்த மஞ்சள் நிற பூக்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக நெய் தொடர்பான ஏதாவது ஒரு பிரசாதத்தை வைக்க வேண்டும். வெறும் சாதத்தை வடித்து அதில் நெய்யை ஊற்றி கூட கலந்து நாம் வைக்கலாம் அல்லது ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் மட்டும் தனியாக எடுத்துக் கூட நெய்வேத்தியமாக வைக்கலாம். ஆனால் இப்படி வைத்த நெய்வேத்தியத்தை வீணாக்காமல் அதை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வைத்து முடித்துவிட்டு துளசி இலைகளையும் வாசனை மிகுந்த மலர்களையும் வைத்து பெருமாளின் படத்திற்கு “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். ஒருவேளை வீட்டில் இருக்கக்கூடிய பெண்களால் இந்த வழிபாட்டை செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் அன்றைய தினம் தங்களால் இயன்ற அளவுக்கு பிறருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மூன்று நபருக்காவது வயிறு நிறைய அன்னதானம் செய்வதன் மூலமும் பெருமாளின் அருளை பெற முடியும், முக்கியமாக கிரக தோஷத்தை நீக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய தாந்த்ரீக பரிகாரம்

பெருமாளுக்கு உரிய கிழமையில் பெருமாளுக்கு உரிய திதியில் நவம்பர் மாதம் பிறக்கிறது என்பதால் நவம்பர் மாதத்தின் முதல் நாள் மறவாமல் பெருமாளை வழிபாடு செய்து பெருஞ்செல்வத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்