- Advertisement -

துளசி கல்யாண வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை தூவாதசி அன்று துளசி திருக்கல்யாணம் என்பது நடைபெறும். இந்த துளசி திருக்கல்யாணம் என்பது பலரது இல்லங்களிலும் கோலாகலமாக நடைபெறக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படி துளசிக் கல்யானத்தை செய்யக்கூடிய வீட்டில் திருமண யோகம் உண்டாகும், சர்வ மங்களமும் கூடிவரும், பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் கிடைக்கும், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட துளசி திருக்கல்யாண நாளன்று திருக்கல்யாண வைபவத்தை செய்ய இயலாதவர்கள் செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

துளசி கல்யாண வழிபாடு

துளசியின் வரலாறு பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட துளசியை மகாவிஷ்ணு மணம் புரியக்கூடிய நாளாக தான் துளசி திருக்கல்யாண நாள் திகழ்கிறது. அன்று பலரும் தங்களுடைய இல்லத்தில் இருக்கக்கூடிய துளசி மாடத்திற்கு மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொள்வார்கள். பிறகு கிருஷ்ணரின் சிலை படம் இருக்கும் பட்சத்தில் அதை அருகில் வைத்தோ அல்லது நெல்லி மர குச்சியை அருகில் வைத்தோ திருக்கல்யாணம் நடத்துவார்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் குடும்பத்திற்கு அளவில்லாத நன்மைகள் உண்டாகும். ஒருவேளை திருக்கல்யாணம் செய்ய இயலவில்லை என்பவர்கள் அந்த அளவில்லா பலனை பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

துளசி திருக்கல்யாணம் என்பது இந்த வருடம் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளோ இந்த திருக்கல்யாண வழிபாட்டை செய்யலாம். ஒருவேளை காலை நேரத்தில் செய்ய இயலவில்லை என்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த திருக்கல்யாண வழிபாட்டை செய்யலாம். திருக்கல்யாண வழிபாட்டை செய்பவர்கள் அசைவத்தை தவிர்க்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் துளசி செடி அல்லது துளசி இலை வேண்டும். அதைப்போல் மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய சாலிகிராமக்கல், சங்கு போன்ற ஏதாவது ஒன்று வேண்டும்.

வீட்டில் துளசி செடி இருக்கும் பட்சத்தில் அந்த துளசி செடியை சுத்தம் செய்து துளசி மாடத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பச்சரிசி மாவினால் கோலம் போட்டு அருகிலேயே மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய சாலிகிராமக்கல் அல்லது சாலிகிராமக்கல் அல்லது சங்கை வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். ஒருவேளை வீட்டில் சாலிகிராமக்கல், சங்கு இல்லை என்பவர்கள் ஒரு முழு நெல்லிக்காயை கூட மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். துளசி செடி இல்லாதவர்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தட்டில் துளசி இலைகளை பரப்பி அதற்கு மேல் மகாவிஷ்ணு அம்சம் பொருந்திய பொருளை வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடங்குவதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பிள்ளையாருக்கு வாசனை மிகுந்த மலர்களை வைத்து வழிபாட்டை தொடங்க வேண்டும். துளசி செடிக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை 9 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் துளசி செடிக்கும் துளசி செடிக்கு அருகில் இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய பொருளுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

மந்திரம்

” நமஸ் துளசி கல்யாணி நமோ விஷ்ணுப்ரியே சுபேநமோ மோக்ஷப்ரதே தேவி ஸம்பத் ப்ரதாயிகே “

இதையும் படிக்கலாமே: தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு

துளசி திருமணத்தை பிரம்மாண்டமாக செய்ய இயலவில்லை என்றாலும் இந்த எளிமையான வழிபாட்டை பின்பற்றுவதன் மூலம் திருக்கல்யாணம் செய்ததற்குரிய பலனை பெற முடியும். முழு மனதோடு மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியும் நினைத்து இந்த வழிபாட்டை செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்