- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு

தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு காரணமாக திகழக்கூடியது நாம் பெற்ற தோஷங்கள் தான். இந்த தோஷங்களை பல வகைகளில் பிரிக்கலாம். நம்முடைய ஜாதகத்திலேயே இருக்கக்கூடிய தோஷமாக இருந்தாலும் சரி, கிரகங்களின் மாற்றத்தால் ஏற்படக்கூடிய தோஷமாக இருந்தாலும் சரி, நாம் செய்த கர்ம வினைகளால் ஏற்பட்ட தோஷமாக இருந்தாலும் சரி அதன் மூலம் நாம் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்போம். அப்படிப்பட்ட கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க வேண்டும். அந்த தோஷங்களை நீக்குவதற்கு உதவக்கூடிய தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த முறையில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தோஷங்களை நீக்கும் வழிபாடு

நவகிரகங்களையும் தன்னகத்தே அடக்கி ஆளக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் விநாயகர் பெருமான். அதனால்தான் இவரை முழு முதற் கடவுள் என்று நாம் கூறுகிறோம். எந்த ஒரு காரியத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு முக்கியமான காரணமாகவும் இது திகழ்கிறது. அதனால் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி அந்த தோஷங்கள் நீங்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது காலை 7:45 மணியிலிருந்து 8: 45 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் விநாயகரின் படம் அல்லது சிலை கண்டிப்பான முறையில் இருக்கும். அவருடைய படத்தையோ சிலையையோ சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அந்த தட்டில் அருகம்புல்லை பரப்பிக் கொள்ளுங்கள்.

அருகம்புல்லுக்கு மேலாக ஒரு அகல் விளக்கை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். விநாயகப் பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு விநாயகப் பெருமானின் “ஓம் கணேசாய நமஹ” என்னும் மந்திரத்தை 54 முறை தீபச்சுடரொளியை பார்த்தவாறு கூற வேண்டும். இவ்வாறு கூறுவதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இந்த தீபம் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தீபத்தை குளிர வைத்த பிறகு அருகம்புல்லை எடுத்து விநாயகரின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும் .

- Advertisement -

இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் அர்ச்சனை

முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்து சகலதோஷத்தையும் நீக்கி நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்