- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 19 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 19 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான மீட்டிங், இன்டர்வியூ, புதிய ஒப்பந்தங்கள் போட போறீங்கன்னா, நீங்க இன்னும் இன்று கவனமாக செயல்பட வேண்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் அதிக எதிர்பார்ப்பு வைக்கக்கூடாது. சின்ன சின்ன ஏமாற்றங்களால் உங்கள் மனது சோர்வடைய வாய்ப்பு உள்ளது. கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். மற்றபடி இன்று குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மன உறுதியோடு செயல்பட வேண்டும். மனதிற்கு பிடித்தவர்களோடு அதிகமாக சண்டை போடாதீங்க. உங்களுக்கு பிடித்த விஷயங்கள் உங்கள் கை நழுவி செல்ல வாய்ப்புகள் உள்ளது. வேலையில் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. செலவுகளை குறைக்க வேண்டும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய வெளித்தோற்றம் அழகாகும். வசீகரம் அதிகரிக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். நாலு பேர் மத்தியில் உங்கள் கை உயர்ந்து நிற்கும். பயணங்களால் நன்மை உண்டு.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் போவது தெரியாது. நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். நல்லதே நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். புது முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலின் போது உஷாராக இருந்து கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த நாளில் வியாபாரத்தில் எதிர்பாக்காத லாபங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். தேவையான சமயத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவுகளுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்வீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேண்டாத விஷயங்கள் தானாக உங்களை விட்டு விலகும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் இளைஞர்களுக்கு இன்று நன்மைகள் எல்லாம் வீடு தேடி வரும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்படக்கூடாது, முன் கோபடக் கூடாது. உங்களுக்கு கிடைக்கும் நல்ல விஷயங்கள் கைநழுவி செல்ல வாய்ப்பு உள்ளது. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நல்ல தூக்கம் இருக்கும். நல்ல சாப்பாடு மன நிறைவை கொடுக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சுப செலவு ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்‌. கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அதிகமாக பேசாதீர்கள். தேவையற்ற வாக்குவாதத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. யார் என்ன சொன்னாலும் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கட்டும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

சற்று முன்