- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 24 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 24 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்குவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயற்சிகளை மேற்கொள்ளலாம். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காக பேச்சு வார்த்தைகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்த வங்கி கடன் முயற்சி செய்யலாம். முன்னேற்றத்திற்கு இன்று எந்த தடையும் வராது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று காரிய தடை விலகும் நாள். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். மனக்குழப்பம் நீங்கும். குடும்ப சண்டை சச்சரவுகள் சரியாகும். நிம்மதி பிறக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகளை குறைத்து சேமிப்பு இரட்டிப்பாக்குங்கள். எதிர்கால சேமிப்புக்கு, இன்றைக்கு பிள்ளையார் சுழி போடலாம். நல்லதே நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு நல்ல வழிகள் கிடைக்கும். சொத்து சுகம் வாங்கவும் யோகம் உண்டு. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். சோம்பேறித்தனத்திலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். உங்களுக்கான வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிரி தொல்லை விலகும். நல்லதே நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களால் நிறைய நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க கொஞ்சம் வாய்ப்புகள் உள்ளது, சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வேலையும் வியாபாரமும் எப்போதும் போல சுமூகமாக செல்லும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை திருப்தியாக செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரி உறவுகள் பலப்படும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். உங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்ற முயற்சி செய்யலாம். குலதெய்வ கோயிலுக்கு செல்லலாம். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இன்று இனிய நாளாக அமையும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களால் செய்து முடிக்க முடியாத வேலைகளை இன்று கையில் எடுங்கள். நிச்சயமாக அந்த வேலையில் ஒரு நிறைவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகளை குறைக்க வேண்டும். நீண்ட தூரப் பயணங்களை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

சற்று முன்