- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 27 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 27 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாள் தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். கூடவே வேலை செய்து கொண்டு, உங்களுடைய வேலையை குறை சொல்லிக்கொண்டே இருந்தவர்கள் எல்லாம் கூட, உங்களுக்கு நண்பர்களாகி விடுவார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப வாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். கடவுள் உங்களுக்கு நிறைய சோதனையை கொடுப்பான். ஆனால் கைவிடமாட்டான். எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் நடந்து கொள்ளுங்கள். உண்மையை மட்டும் பேசுங்கள். நல்லதே நடக்கும். இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதி கிடைக்கும். சரியான நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். சோம்பேறித்தனம் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும்.

- Advertisement -

சிம்மம்


சிம்மராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். மனதளவில் சில சந்தேகங்கள் எழும். இதனால் நேரம் வீணாகும். வேலையிலும் வியாபாரத்திலும் பின்னடைவு வரலாம். மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குப்பை தொட்டி போல் எல்லா விஷயத்தையும் மனசை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று லாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். ஒரு வேலையை கையில் எடுப்பதற்கு முன்பு, ஒன்றுக்கு பலமுறை சிந்திப்பீர்கள். திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்வீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். இந்த நாள் நல்ல நாளாக அமையும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறையோடு செயல்பட வேண்டும். அடுத்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம். சுயமாக சிந்தித்து செயல்படுங்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபட நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். வண்டி வாகனம், சொத்து வாங்குவதற்கும் நல்ல நேரம் கைகூடி வரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் வெளிப்படும் நாளாக இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். மன பாரத்தை குறைத்துக் கொள்வீர்கள். பகை விலகும் நாள். புரிதல் உண்டாகும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடலாம். இன்று முருகர் வழிபாடு செய்துவிட்டு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மேலும் எல்லாம் வெற்றி அடையும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள். உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டிற்கு தேவையான பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

சற்று முன்