- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 31 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 31 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. குறிப்பாக ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் பேராசை வேண்டாம். உங்களுடைய கடமைகளை மட்டும் செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். யார் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் வைக்காதீர்கள். ஏமாற்றத்தால் மனசோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். நிதிநிலைமை சீராக இருக்கும். பண்டிகையை கொண்டாட தேவையான பணம் கையை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்பும் மரியாதையும் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வருமானம் சீராக இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீட்டில் இருப்பவர்களுடைய தேவைகளையும் புரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் எதிர்ப்புகள் போராட்டங்கள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். நேரத்தை வீணடிக்காமல் கடமைகளை முதலில் சரியாக முடித்து விடுங்கள். பிறகு மற்ற வேலைகளை கவனித்துக் கொள்ளலாம். இன்று அதிக நேரம் தேவையில்லாமல் கைப்பேசி பார்க்க வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனம் குழப்பத்தில் இருக்கும். தெளிவு இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் குழப்பம் வரலாம். பழைய விஷயங்களை யோசித்து நேரத்தை வீணாக்க வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. மனதை ஒருநிலைப்படுத்தி இறை வழிபாடு செய்யுங்கள். தியானம் செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வீன்வம்பு வழக்குகளுக்கு செல்ல வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். எந்த முடிவுகளை எடுப்பது, எந்த முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற டென்ஷன் சில பேருக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு முழுசாக கிடைக்காது. சொந்த பந்தங்களோடு பிரச்சினை வரலாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரலாம். இன்று பொறுமையாக செயல்பட வேண்டிய நாள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க கூடாது. பொய் சொல்லக்கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் சீராக இருக்கும். தேவைக்கு எப்ப பணம் வந்து சேரும். வாரா கடன் வசூல் ஆகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும். சொத்து வாங்கக்கூடிய யோகமும் சில பேருக்கு உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்களை சந்திக்கலாம். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் சீராக இருக்கும். வாரா கடன் வசூலாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள். பிள்ளைகளோடு சேர்ந்து இருந்து, அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். மனநிறைவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று லாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள். அனாவசியமாக ஒரு ரூபாயை கூட செலவு செய்ய மாட்டீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று யாரிடமும் போட்டி போடக்கூடாது. யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பேசுவதை குறைத்துக் கொண்டால், பலவிதமான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அதிக நேரம் கைபேசி பார்ப்பதை குறைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

சற்று முன்