மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று லாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். ஆதாயம் இல்லாமல் வேலைகளை கையில் எடுக்க மாட்டீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். பல நாள் கனவு நிறைவேறும். இன்று வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், எதிர்காலத்தில் பெரிய லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் நேரத்திற்கு முடியும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பயணங்களால் மனநிறைவை அடைவீர்கள். சென்ற இடம் எல்லாம் நல்ல கவனிப்பு இருக்கும். இந்த நாள் சுகமான நாளாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். செய்யும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொறுத்த வரை நிதானம் தேவை. தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். பிள்ளைகளைப் பற்றிய கவலை கொஞ்சம் அதிகரிக்கும். கவலை வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். சுப செலவுகள் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் சுகமான அனுபவத்தை கொடுக்கும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் பெரிசாக பாதிப்புகள் இருக்காது. இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. ஒரு முக்கியமான வேலைக்கு செல்வதாக இருந்தால் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு செல்லவும். குறிப்பாக இன்டர்வியூ அப்பாயின்மென்ட் உள்ளவர்கள் இன்று எந்த ஒரு சூழ்நிலையிலும் தாமதிக்கவே கூடாது பாத்துக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று தடைகள் தடங்கல்கள் அவ்வப்போது வந்து போகும். தடைகளை தகர்க்க வேண்டும் என்றால், விடாமுயற்சி தேவை. மன தைரியம் தேவை. எந்த இடத்திலும் பயத்தை முன் வைக்காதீர்கள். உங்களால் முயன்ற உழைப்பை முதலீடாக போடுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து சுறுசுறுப்பாக செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சந்தோஷம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கரம் பிடிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். தங்கம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் பஞ்சாயத்துகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சோர்வு இருக்கும். மனக்கவலை இருக்கும். உற்சாகமற்ற சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையில் எந்த பின்னடைவும் வராது. உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். பெண் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளால் சில தொந்தரவுகள் வரலாம். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, நேர்மை ஒன்றே வழிவகுக்கும்.