மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். இன்று விடுமுறை நாள் என்பதால், நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், குடும்ப உறவுகளோடு மகிழ்ச்சியாக பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட இன்று வேலை பளு குறைவாகத்தான் இருக்கும். நல்லதே நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மனபயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உறவுகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. சண்டை போடக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். நல்ல பெயர் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மன நிறைவான நாளாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் செய்யாமல் கிடப்பில் போட்டு இருக்கு வைத்திருந்த வேலையை இன்று கையில் எடுப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் கடமையிலிருந்து தவற மாட்டீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கூடுமானவரை புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். நகை அடமானம் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் கூடுமானவரை அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். அவசர அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பெருமையான நாளாக இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சில பேருக்கு சொத்து சுகம் வாங்க கூடிய நல்ல யோகமும் கைக்கூடி வரும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுபமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். நண்பர்களோடு இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். மனபாரம் குறையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று போட்டி பொறாமை டென்ஷன் இவை அனைத்தையும் சந்திக்க கூடிய சூழ்நிலை வரலாம். தைரியமாக செயல்பட வேண்டும். பிரச்சனைகளை கண்டு பின்வாங்க கூடாது. அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் அவ்வப்போது சின்ன பின்னடைவு வரலாம். பெரிசாக பாதிப்புகள் இல்லை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெறுக கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு ஒற்றுமை அதிகரிக்கும். இறை வழிபாட்டின் மூலம் மனநிறைவு கிடைக்கும். கூடுமானவரை இன்று பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.