இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் தவான் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி பெரிய ஸ்கோரை 358 ரன்கள் அடித்தது.
பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி இலக்கினை எளிதாக 48 ஓவர்களில் சேசிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஹாண்ட்ஸ்கோம்ப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் டர்னர் இறுதியில் அதிரடியாக விளையாடி 43 பந்தில் 84 அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியின் கடைசி வீரரான பும்ரா கடைசி பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை அவர் சிக்ஸ் அடித்தார். இதனை கேலரியில் இருந்து பார்த்த கோலி விழுந்து விழுந்து சிரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ :
Bumrah’s last ball six…!!https://t.co/d0VVQoXxyZ
— Vidshots (@Vidshots1) March 10, 2019
இந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் 5ஆவது ஒருநாள் போட்டி நாளை 13 ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்