- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால்...

பெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.

- Advertisement -

முந்தைய காலங்களில் எல்லாம் அரசர்கள் தங்களது நாடு வளமாக இருக்க, நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேர்த்து, தங்களுடைய அரண்மனையில் பெரிய பெரிய யாகங்களையும், ஹோமங்களையும், சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து நடத்துவார்கள். அந்த யாகமும், ஹோமமும், மந்திரமும் மன்னரையும் அந்த ஊர் மக்களையும் சிறப்பாக வைத்திருக்கும். மன்னராட்சி காலத்தில் இந்த வழக்கம் இருந்தது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அடுத்ததாக காலம் மாறிய பின்பு பலர் தங்களது வீட்டிலேயே தனியாக வருடத்திற்கு ஒரு முறையாவது கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் இப்படி சிறிய ரோமங்களை புரோகிதர்களை அழைத்து செய்து கொள்வார்கள். ஆனால் இதற்கான பணச்செலவும் வேலைப்பளுவும் சற்று அதிகம் தான். காலத்தின் மாற்றத்தால் இப்போதெல்லாம், வீடு கட்டும்போது முதன்முறையாக யாகம் நடத்தியதோடு சரி. அதன்பின்பு யாகம் நடத்துவது சற்று சிரமமாகத்தான் உள்ளது. என்ன செய்வது? வேலைப்பளு ஒரு பக்கமிருக்க இதற்காக ஆகும் செலவை சமாளிக்கும் சக்தி நம்மிடம் இருக்க வேண்டுமல்லவா?

milagu-deepam

வீட்டில் ஹோமம் நடத்தும் சூழ்நிலையானது தற்சமயம் இல்லை. என்ன செய்வது? அதற்கு ஈடு இணையாக வேறொரு பரிகாரத்தை தான் கட்டாயம் நாம் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம். பஞ்சகவ்ய விளக்கு. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது. உங்களால் முடிந்தால் இந்தப் பொருட்களையெல்லாம் வீட்டில் வாங்கி வைத்து, பிசைந்து விளக்கு வடிவில் தயாரித்து, காயவைத்தும் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பஞ்சகவ்வியம் விளக்கை மொத்தமாக வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கூடத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும் சரி. அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து கட்டாயம் நெய்தான் ஊற்றவேண்டும். திரிபோட்டு ஏற்றிவிட வேண்டும். தீபம் மட்டும் எரிந்த பின்பு அனைத்து விடக்கூடாது. தீபத்தோடு சேர்த்து அந்த பஞ்சகவ்விய விளக்கும் ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும்.

el deepam

எரிந்த சாம்பலை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனைத் தரும். இந்த ஹோமத்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் செய்வதில் எந்த தவறும் இல்லை. இதற்கு பெரிய செலவு ஆகாது. வேலைப்பளுவும் சுலபம்தான். இந்த ஹோமமானது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு  சமமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் இந்த தீபத்தை ஏற்றிய பின்பு ஏதாவது ஒரு பிரசாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யலாம். யாகம் செய்த புண்ணியத்தை, பரிபூரணமாக அடைய அன்னதானமும் சேர்ந்திருந்தால் நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
ஊட்டத்தூர் சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோவில் வரலாறு

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have panchagavya. panchagavya deepam. panchagavya vilakku. panchagavya vilakku benefits

சற்று முன்