காலையில் கண் விழிக்கும் போது இந்த சத்தங்கள் உங்கள் காதுகளில் கேட்டால், அன்றைய தினம் நீங்கள் தொட்டதெல்லாம் நிச்சயம் வெற்றிதான்.

wakeup
- Advertisement -

காலையில் நாம் கண் விழிக்கும் போது, நேர்மறை ஆற்றல் முழுமையாக நிறைந்திருந்தால் அன்றைய நாள் முழுவதும், நல்ல நாளாக அமையும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதனால் தான் நம்முடைய முன்னோர்கள் காலையில் எழுந்து கண் விழிக்கும்போது இறைவனின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அல்லது மன அமைதியை தரக் கூடிய இயற்கை காட்சிகள், அதிர்ஷ்டத்தை தரக்கூடிய விலங்குகள், இப்படியாக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பொருட்களில் கண்விழிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதோடு சேர்த்து சில சத்தத்தையும் நாம் காதுகளில் கேட்டால், அன்றைய தினம் நமக்கு சிறப்பான நாளாக அமையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன சத்தங்கள்? அதை நாம் எப்படி கேட்பது? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

wakepu

அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இயற்கை சூழலில் தங்களுடைய வீட்டை அமைத்து வைத்திருந்தார்கள். காலை கண்விழித்ததும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த, முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழும் பசு மாடு, கன்று குட்டி, முகத்தில் விழிக்கும் பாக்கியத்தைப் பெற்று இருந்தார்கள். அழகான பறவைகள் பேசும் சத்தம், கிளிகள் கொஞ்சம் சத்தங்கள் எல்லாவற்றையும் கேட்கும் பாக்கியம் அவர்களுக்கு இருந்தது. அந்த அழகான காலை பொழுது, நம்முடைய அந்த நாள் முழுவதையுமே அழகாக்கி தரும். காகம் கத்துவது, சிட்டுக்குருவி கத்துவது, நம் காதுகளில் விழுந்தால் அன்றைய நாள் முழுவதும், அதிர்ஷ்டமான நாளாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வீட்டை சுற்றி அமைதியான சூழ்நிலை, வீட்டை தள்ளி கொஞ்சம் தூரத்தில் கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில் மணி அடிக்கக்கூடிய சத்தம், அதிகாலை வேளையில் வீடு வரை கேட்கும். அந்த காலத்தில், நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்துவந்த வாழ்க்கை சூழல் அப்படி அமைந்திருந்தது. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இயற்கையான, இப்படிப்பட்ட சத்தங்களை எல்லாம் நம்முடைய காதுகளில் கேட்பது என்பது அரிதான சூழ்நிலை ஆகிவிட்டது? பேருந்துகளின் ஹாரன் சத்தமும், கூச்சலும் தான் இன்று விடிந்தவுடன் நம் காதுகளில் கேட்கின்றது.

என்னசெய்வது காலத்திற்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டியது தான். பசு மாட்டின் முகத்தில் விழிப்பது, காக்கை குருவிகள் சத்தம் நம் காதில் கேட்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஜீவராசிகள் வாழும் இடத்திற்கும் நம்மால் குடி போக முடியாது. நாம் வாழும் இடத்திற்கும் இப்படிப்பட்ட ஜீவராசிகளை கொண்டுவரவும் முடியாது.

- Advertisement -

வீட்டில் பல்லி இருந்தாலும் மிகவும் நல்லது. அந்த பல்லியை எந்த மருந்தை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தலாம் என்று தான் இன்று நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மேற்குறிப்பிட்டுள்ள, சத்தங்களையெல்லாம் கேட்டு, நிறைய பேர் வாழ்க்கையில், அன்றைய தினம் அதிர்ஷ்டமான தினமாக மாறிய, அனுபவங்களும் உண்டு. இதற்கு நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை சாட்சி.

Kagam

சரி, நாம் காலையில் கண் விழிக்க, நம்முடைய கைபேசியில், அலாரம் வைப்போம். அந்த அலாரத்தின் ஓசையை பசுமாடு கன்று கத்துவது போல, காகம் கத்துவது போல, குருவி, பச்சைக்கிளி போன்ற அழகான பறவைகள் கத்துவது போல, கோவில் மணி ஓசை ஒலி எழுப்பக் கூடிய வசதிகள் இப்போது நம்முடைய கைபேசியிலேயே வந்துவிட்டது. முடிந்தால், இப்படிப்பட்ட சத்தங்களை நீங்கள் உங்களுடைய தொலைபேசியில், காலையில் அலாரம் சத்தமாக பயன்படுத்தலாம். ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

squirril

கண்விழித்து நீங்கள் பார்க்கும் முதல் காட்சி பசுவுடன் இருக்கும் கன்று, குஞ்சுகளுடன் இருக்கும் பறவை அழகான அணில், இப்படிப்பட்ட பொருட்களை முதலில் பார்க்கலாம். அதாவது உங்களுடைய மனதிற்கு அமைதியை தரக்கூடிய படம் ஏதாவது ஒன்று, வாங்கி நீங்கள் கண் விழித்தவுடன் அதை பார்க்குமாறு உங்களது படுக்கை அறையில் மாட்டி வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களின் முகத்தில் முழித்தால் கூட அன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக மாறும்.

birds

ஒரே ஒருமுறை இப்படி முயற்சி செய்து பாருங்கள். உண்மையான சந்தோஷம் ஒன்றை தவிர, நம்முடைய வாழ்க்கையை வேறு எந்தப் பொருளாலும் நிறைவு செய்யவே முடியாது. இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களை செய்வதன் மூலம் கூட, நம்முடைய அன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக தொடங்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
செவ்வாய்க்கிழமையில் இதை தவறியும் செய்யக்கூடாது என்று சொல்வதன் ஜோதிட காரணம் என்ன தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -