தொப்பை மற்றும் தேவையற்ற உடல் சதையை வெறும் 10 நாட்களில் சுலபமாக குறைத்துவிட முடியும். 1 ஸ்பூன் இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள்.

belly-fat
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு உடலில் தேவையற்ற சதைகளின் மூலம் பிரச்சினை இருக்கும். குறிப்பாக வயிற்றுப் பகுதி, இடுப்பு பகுதியில், தொடைப் பகுதி, போன்ற இடங்களில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து சிலருக்கு சதைகள் தொங்கும் அளவிற்குக்கூட அதிகமாக இருக்கும். சில பேருக்கு இந்த சதை தொப்பையில் மட்டுமே இருக்கும். இந்தத் தேவையற்ற சதைகளை சுலபமான முறையில் எப்படி கரைப்பது? முற்றிலும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி, செய்யக்கூடிய ஒரு லேகியத்தை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோருக்கும் புரியும்படி சொல்ல போனால் ஆங்கிலத்தில் BELLY FAT எப்படி குறைப்பது?

Inji and lemon juice

முதலில் இந்த லேகியத்தை செய்ய தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். இஞ்சி 50 கிராம், மல்லி 5 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், ஓமம் 1 ஸ்பூன், சுக்கு 10 கிராம், பனைவெல்லம் 50 கிராம், நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் இஞ்சியை நன்றாக தோல் சீவி விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சாறு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 300 ml தண்ணீர் ஊற்றிக்கொண்டால் சரியான அளவாக இருக்கும். இந்த தண்ணீரை திப்பி இல்லாமல் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

powder

அடுத்தபடியாக ஒரு கடையில் மல்லி, மிளகு, ஜீரகம், ஓமம், சுக்கு, இந்த பொருட்களை போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ரொம்பவும் வறுக்க வேண்டாம். இந்த பொருட்கள் அனைத்தும் சூடானால் போதும். அதன் பின்பு இந்த பொருட்களை ஆற வைத்து விட்டு, மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது லேகியம் செய்ய தொடங்கி விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில் இஞ்சியில் இருந்து எடுத்து வைத்திருக்கும் சாறை ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இந்த இஞ்சிச்சாறுடன் பனைவெல்லத்தை நசுக்கி போட்டு, நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சிசாறுடன் வெல்லம் கரைந்ததும் ஒரு கொதி வந்ததும், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடியை கடாயில் சேர்த்து கைவிடாமல் கட்டியாகாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இது தளதளவென கொதித்து லேகியம் பதத்திற்கு வரும்.

legiyam

கைவிடாமல் ஒரு கரண்டியை வைத்து இந்த பொருட்களை எல்லாம் கிளறிக் கொண்டே இருக்கும்போது, லேகியம் கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயத்தில், இறுதியாக இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக கலந்து அடுப்பை அணைத்துவிட வேண்டும். மொத்தமாக இந்த லேகியம் தயாராக 10 லிருந்து 15 நிமிடங்கள் தான் எடுக்கும்.

legiyam1

இந்த லேகியம் நன்றாக ஆறிய பின்பு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம். தினமும், காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு இந்த லேகியத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். தொடர்ந்து 30 நாட்கள் வரை சாப்பிட்டு பாருங்கள் பின்பு உங்களுடைய உடலில் நடக்கும் மாற்றத்தை. உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, தேவையற்ற சதைகள் படிப்படியாக குறைவதை கண் கூடாகக் காணலாம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -