இதையும் கொஞ்சம் தெரிஞ்சு தான் வச்சுக்கோங்களேன்! மேஜிக் போட்ட மாதிரி சமையலறை பிரச்சனைகளை சரிசெய்ய 5 சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!

kitchen-tip4
- Advertisement -

Tip 1:
சில டிப்ஸ் எல்லாம் மேஜிக் போட்ட மாதிரி டக்குன்னு ஒர்க்அவுட் ஆகும். அந்த மாதிரி பாஸ்டா 3 டிப்ஸ் உடனே பார்க்கலாம் வாங்க. சிங்க், வாஷ் பேஷன், பாத்ரூமில் குளிக்கும் தண்ணீர் போகுமிடம், இப்படிப்பட்ட இடங்களில் திடீரென்று ஏதாவது ஒன்று அடைத்துக்கொள்ளும். தண்ணீர் போவதில் சிரமம் ஏற்படும். இதை சரிசெய்ய நிறைய வழி உள்ளது. அதில் சிம்பிளான சூப்பரான ஒரு வழி. ஹேர்பிக்கை எடுத்து தண்ணீர் போகும் ஓட்டையில் கொஞ்சமாக ஊற்றி விடுங்கள். தண்ணீர் எல்லாவற்றையும் வடியவிட்டு அதன்பின்பு ஹேர் பிக்கை ஊற்ற வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றினால் போதும். 5 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு கொதிக்கும் தண்ணீரை 1/2 கப் அளவு எடுத்து, அந்த ஓட்டையில் ஊற்றினால் போதும். டக்குனு அடைப்பு சரியாகிவிடும்.

shink

Tip 2:
சில சமயம் தோசை கல்லை என்னதான் செய்தாலும் அந்த கல்லில் தோசை வரவே வராது. தோசை ஊற்றும்போது கொஞ்சம் இல்லத்தரசிகளுக்கு கருப்பாகத்தான் செய்யும். குறிப்பாக தோசைக்கல்லை முழுமையாக சுத்தம் செய்து விட்டு தோசை சுடுவது கொஞ்சம் கஷ்டம். அந்த தோசைக்கல் மீண்டும் பழக வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் வைத்து சூடு செய்திருக்கும் அந்த தோசை கல்லின் மீது, கொஞ்சமாக தூள் உப்பை நன்றாக தூவி விடுங்கள். ஒரு சிறிய காட்டன் துணியை எடுத்து அந்த உப்பை, நன்றாக அந்த கல்லில் துடைத்துவிட்டு, அதன் பின்பு சுத்தம் செய்து விடுங்கள். தோசைக்கல்லை கழுவக்கூடாது. அப்படியே ஒரு நல்ல துணியை போட்டு சுத்தமாக துடைத்துவிட்டு, அல்லது வெங்காயத்தை வைத்து நன்றாக தோசைக்கல்லை தேய்த்து விட்டு, பின்பு தோசையை வார்த்து பாருங்கள். தோசை சட்டென சூப்பராக வரும். மேஜிக் போட்ட மாதிரி. கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க.

kitchen-tip5

Tip 3:
அடுத்தது நம்முடைய வீடுகளில் இருக்கும் ஸ்டீல் டேப்பை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அந்த ஸ்டீல் குழாய்களை சபீனா பவுடர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். ஒரு பல் தேய்க்கும் பிரஷ் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சபினா பவுடரை தொட்டு ஸ்டீல் டேப் முழுவதும் நன்றாக அழுத்தம் கொடுத்து தேய்த்து உடனே தண்ணீரை ஊற்றி கழுவினால், டேப்பில் இருக்கும் துரு கரைகள் கூட நீங்கிவிடும். ரொம்ப ஈஸியா.

- Advertisement -

Tip 4:
முதலில் 3 டிப்ஸ் நிச்சயமாக உங்களுடைய வீட்டிற்கு உபயோகமான தான் இருக்கும். இனி சொல்லப்படும் குறிப்புகள் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் அப்பளம் பொரித்து, அடுத்த நாளைக்கு மிஞ்சி விட்டால் அது கொஞ்சம் நமத்து விடும். நமத்த அப்பளத்தை மீண்டும் எண்ணையை காய்ச்சி, ஒரு முறை பொரித்தெடுத்தால் அப்பளம் புதிது போல மொறுமொறுவென மாறிவிடும்.

kitchen-tip6

Tip 5:
எல்லோரது வீட்டிலும் தலையணை உறை சுத்தமாகத்தான் இருக்கும். தலையணை கவர். ஆனால், தலையணைக்கு உள்ளே எண்ணெப்பசை படிந்து அழுக்கு படிந்து நாற்றம் அடிக்கத்தான் செய்யும். இந்த பிரச்சனையை எப்படி தவிர்ப்பது. தலையணைக்கு  இரண்டு உறையை பயன்படுத்தி பாருங்கள். உள்ளே சாதாரண விலை குறைந்த உறையை போட்டாலும் சரி தான்.

pillow

இரண்டு உரைகள் இருந்தால் தலையணைக்கு உள்ளே எண்ணெப்பசை போகாமல் இருக்கும். துவைக்கும்போது இரண்டு உரையையும் சேர்த்து துவைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தலையணையை நீண்ட நாட்களுக்கு கார வாசனை என்று சொல்லப்படும் கெட்ட வாசனை வராமல் அழுக்கு படியாமல் தவிர்க்கலாம்.

- Advertisement -