மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக இருக்கும். பட்டாசுகள் வெடிக்கும் போது கூடுதல் கவனத்தோடு இருக்கவும். இந்த தீபாவளி நாளில் உங்களுடைய வீட்டில் சந்தோஷம் பொங்கி வழியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்தாலும், சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. பொன் பொருள் சேர்க்கை உண்டு. வருமானம் பெருகும். பட்டாசுகள் வெடித்து குடும்பத்தோடு இந்த தீபாவளி நாளை கொண்டாடி மகிழ்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்க சொந்த பந்தங்களோடு சேர்ந்து இன்று நேரத்தை செலவு செய்யப் போகிறீர்கள். பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வீர்கள். முன்னோர்கள் வழிபாடும் சிறப்பாக நடக்கும். மன நிம்மதி கிடைக்கும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்தாலும், சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பட்டாசு வெடிக்கும் போது கவனத்தோடு இருக்க வேண்டும். குறைவாக பேசுங்கள். எனர்ஜியை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். மனதில் தேக்கி வைத்திருந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உணவு பழக்க வழக்கத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். பண்டிகை நாள் சிறப்பாக நிறைவடைய போகிறது. ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பட்டாசு வெடிக்கும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும். உணவு விஷயத்திலும் கட்டுப்பாடு வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆடம்பரம் இல்லாத அமைதியான தீபாவளியாக இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இறையருள் பரிபூரணமாக கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிமையாக இருக்கும். பட்டாசு வெடிக்கும் போது கவனத்தோடு இருக்கவும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வருமானம் இரட்டிப்பாகும். பரிசுப் பொருட்கள் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும். தேவைகள் பூர்த்தியாகும். இனிப்பு பட்டாசு என்று சந்தோஷமாக இந்த நாள் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும். எல்லோரும் குழந்தைகள் போல இந்த தீபாவளி நாளை சந்தோஷமாக கொண்டாடுவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கும். தேவையில்லாத டென்ஷனை தலைமேல் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுப்ப வேண்டாம். கூடுதல் பொறுப்போடு செயல்படவும். இந்த இனிய நாள் உங்களுக்கு சிறப்பாக அமைய கூடுதல் கவனம் கொஞ்சம் தேவைப்படும் அவ்வளவுதான்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. நிதானத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும். சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. அளவோடு பேசி, அளவோடு மகிழ்ச்சியாக இருந்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். உணவு பழக்க வழக்கத்திலும் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கட்டும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இருக்கும். பரிசு பொருட்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். தீபாவளி நாளில் நீங்கள் மேற்கொள்ளும் இறை வழிபாடு சந்தோஷத்தை இரட்டிப்பாகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். தீபாவளி வாழ்த்துக்கள்.