எது உண்மையான பக்தி தெரியுமா?

bakthi
- Advertisement -

நாம் அனைவரும் கடவுளிடம் பல வேண்டுதல்களை வைக்கின்றோம். அந்த வேண்டுதல்களை அவர் நிறைவேற்றினால் நான் பதிலுக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்றும் கூறுகிறோம். இதில் உண்மையான பக்தி இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. இதை ஒருவிதமான வியாபாரமாகத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது.

எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி சுத்தமான அன்போடு கடவுளே கதியென்று சரணடைவதுதான் உண்மையான பக்தி. உண்மையான பக்தியுடைய ஒருவருக்கு தெய்வத்தின் அருளே செல்வம். அவர்களுக்கு, இன்பம், தும்பம், மரணம் இப்படி எதை பற்றியும் தெரியாது.

- Advertisement -

இரண்யகசிபுவால் பிரகலநாதன் பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டும் அவன் வருத்தப்படவே இல்லை. அதே போல் பாண்டிய மன்னன், மாணிக்க வாசகரை பலவிதமாக துன்புறுத்தியும் அவர் வருத்தப்படவே இல்லை. தெய்வீக இன்பத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சரீர துன்பம் எதுவுமே தெரியாது என்பதை இதில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

தபஸ்விகள் தவம் செய்யும்போது, ஈ, எறும்பு கடித்தாலும், அதை அவர்கள் அறிய மாட்டார்கள். மனம் கடவுளிடம் இருக்கும்போது சரீர இன்ப, துன்பங்கள் அவர்களது தியானத்தை கலைப்பதில்லை. தன்னை மறந்து பகவானிடம் மனதை வைப்பவர்களுக்கு வெளியில் அல்லது தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.

- Advertisement -

Thirumoolar

ஒருவர் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு இறைவனை நினைத்து கண்ணை திறந்துகொண்டு ஜபம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே ஒரு மாடு செல்கிறது. அனால் அது அவர் கண்களுக்கு தெரியவில்லை. ஒருவர் வந்து ஐயா இந்த வழியாக ஒரு மாடு சென்றதா என்று கேட்கிறார். அவர், நான் கவனிக்கவில்லை என்று கூறுகிறார்.

கண்களை திறந்திருந்தும் அந்த மாடு சென்றதை அவர் கவனிக்காததற்கு காரணம் அவருடைய ஆன்மா இறைவனை மட்டுமே நினைத்திருந்ததால் தான். ஆகையால் ஒருவர் நித்தமும் தன் சிந்தையில் இறைவனை நிலைநிறுத்தி சுத்தமான அன்போடு இறைவனே கதி என்று அவரிடம் சரணடைவதே உண்மையான பக்தி.

- Advertisement -