எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்

kali lemon
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வருவதற்கான முயற்சி எடுப்பார். அந்த முயற்சிகளில் பல போராட்டங்களை சந்தித்து கடைசியில் வெற்றியும் அடைவார். இப்படி வெற்றி அடைந்த ஒவ்வொரு நபருக்கு பின்னாலும் பலவிதமான கஷ்டங்களும் சோகங்களும் இருக்கத்தான் செய்யும். அப்படி இருந்தும் கூட ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி வெற்றிகரமான ஒரு நிலையை அடைந்து விட்டார் என்றால் அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ அவரை சுற்றி பல எதிரிகள் இருப்பார்கள்.

தொழில் ரீதியாகவும் சரி குடும்ப ரீதியாகவும் சரி, எந்த விஷயத்தில் முன்னேறி இருக்கிறார்களோ அந்த விஷயத்தில் எதிரிகள் என்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களால் பல விதங்களில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

எதிரிகளின் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உக்கிர தெய்வங்கள் என்று பார்க்கும் பொழுது காளி, துர்க்கை அம்மன், பைரவர், வீரபத்திரர், பிரத்யங்கிரா தேவி, வராகி அம்மன் இப்படி நாம் பல தெய்வங்களை கூறிக் கொண்டே செல்லலாம். எந்த தெய்வத்தின் ஆலயம் அருகில் இருக்கிறதோ அந்த தெய்வத்தை மனதார வழிபட்டாலே போதும்.

எதிரிகளின் தொல்லை நீங்குவதற்கு செவ்வாய்க்கிழமை அன்று உக்கிர தெய்வத்தை நாம் வழிபட வேண்டும். அருகில் இருக்கக்கூடிய உக்கிர தெய்வ ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை அன்று இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது இரண்டு எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த எலுமிச்சம் பழங்களில் எந்தவித கருப்பு புள்ளிகளோ கீறல்களோ இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த கோவிலில் திரிசூலம் இருக்கிறதா என்பதை கவனித்து பிறகு செல்வது நல்லது. இந்த பரிகாரத்திற்கு திரிசூலம் மிகவும் முக்கியம். அதனால் திரிசூலம் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய தெய்வங்கள் அனைத்தையும் மனதார வழிபட்டு விட்டு அந்த ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும் பொழுது கையில் இந்த இரண்டு எலுமிச்சம் பழங்களை வைத்துக்கொண்டு வலம் வர வேண்டும்.

இவ்வாறு மூன்று முறை வலம் வந்த பிறகு திரிசூலத்திற்கு முன்பாக நின்று கைகளில் இந்த இரண்டு எலுமிச்சம் பழங்களையும் வைத்துக்கொண்டு அங்கு இருக்கக்கூடிய உக்கர தெய்வத்திடம் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டுவதன் மூலம் நம் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளாக இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத மறைமுக எதிரிகளாக இருந்தாலும் அவர்களின் தொல்லைகள் நமக்கு நீங்கும்.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்வதற்காக அவர்கள் எந்த ரூபத்தில் முயற்சி செய்தாலும் அவை அனைத்தையும் நீக்கக்கூடிய வல்லமை மிகுந்த வழிபாடாக தான் இந்த வழிபாடு திகழ்கிறது. மனதார தெய்வத்தை வழிபட்டு விட்டு கையில் இருக்கக்கூடிய இந்த இரண்டு எலுமிச்சம் பழங்களையும் திரி சூலத்தில் குத்தி விட்டு திரிசூலத்தை தொட்டு வணங்கி 5 நிமிடம் அமர்ந்துவிட்டு வீடு திரும்ப வேண்டும். இந்த முறையில் தங்களின் பாதிப்பிற்கு ஏற்றவாறு ஒற்றைப்படை எண்ணிக்கையில் இத்தனை வாரங்கள் என்று நீங்களே கணக்கு வைத்துக் கொண்டு உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேமிப்பாக உயர பரிகாரம்

முழு மனதுடனும் முழு நம்பிக்கையுடைய எந்த வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்கு பலன் அதிகம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வழிபாட்டையும் முழு மனதோடு செய்து எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

- Advertisement -