- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உடம்பில் அடிச்சு போட்ட மாதிரி வலி உள்ளதா? முதுகு, இடுப்பு, கை கால், வலி நீங்க...

உடம்பில் அடிச்சு போட்ட மாதிரி வலி உள்ளதா? முதுகு, இடுப்பு, கை கால், வலி நீங்க தினமும் இந்த 1 லட்டு சாப்பிடுங்கள் போதும்.

- Advertisement -

நிறைய பேருக்கு எப்போது பார்த்தாலும் உடல் சோர்வு இருந்து கொண்டே இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய முதுகு தண்டுவடம், இடுப்பு, கை, கால் வலித்துக் கொண்டே இருக்கும். சில பெண்கள் சொல்லுவார்கள் இல்லையா, ‘இடுப்பு நிக்க மாட்டேங்குது’ அப்படின்னு. இதற்குக் காரணம் உடம்பில் ஊட்டச்சத்து குறைபாடு தான். உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க, உடல் அசதியை நீக்க கை கால் எலும்புகள் உறுதி பெற, தினமும் இந்த ஒரு லட்டை சாப்பிட்டால் போதும். உடலுக்கு ஊட்டச்சத்தை தரக்கூடிய இந்த லட்டுவை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ulunthu-lattu1

இதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். கருப்பு உளுந்து – 1 கப், அரிசி – 1/4 கப், வேர்க்கடலை – 1/2 கப், பொட்டுக்கடலை – 1/2 கப், வெல்லம் முக்கால் 3/4 கப், நெய் – 3 ஸ்பூன், ஏலக்காய் – 2. பச்சரிசி புழுங்கல் அரிசி எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் உளுந்தை எந்த கப்பில் அளந்து இருக்கிறீர்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் சரியான அளவு, அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கருப்பு உளுந்தை சேர்த்து இந்த லட்டுவை செய்தால் மிகவும் நல்லது. கருப்பு உளுந்து இல்லாத பட்சத்தில் வீட்டில் இருக்கும் வெள்ளை உளுந்தையும் பயன்படுத்தி இந்த லட்டுவை செய்யலாம்.

verkadalai

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது நன்றாக சூடானதும், கருப்பு உளுந்தம் பருப்பை முதலில் வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை கைவிடாமல் வறுக்க வேண்டும். உளுந்தை வாயில் எடுத்துப் போட்டால், கடித்து சாப்பிடும் அளவு பக்குவம் வர வேண்டும். வருத்த உளுந்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அரிசியை அதே கடாயில் சேர்த்து, அரிசி நன்றாக பொரிந்து வரும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக வேர்க்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் இந்த 3 பொருட்களையும் ஒவ்வொன்றாக கடாயில் சேர்த்து சிவக்கும் அளவிற்கு வறுத்து, இந்த எல்லா பொருட்களையும் ஒரே தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

pachcharisi

அடுத்து வறுத்த உளுந்து வேர்க்கடலை அரிசி பொட்டுக்கடலை ஏலக்காய் இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு முதலில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் அனைத்தும் நைஸாக அரைபட்ட பின்புதான், வெல்லத்தை மிக்ஸியில் போட்டு ஒரு முறை ஒட்டிக்கொள்ள வேண்டும். வெல்லத்தைப் போட்டு, இந்த கலவையை நீண்ட நேரம் மிக்ஸியில் அரைக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ulunthu-lattu2

வெல்லம் சேர்த்து அரைத்த இந்த பொருட்களை ஒரு அகலமான கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி சூடு செய்து, நெய் சூடாக இருக்கும்போதே அதை லட்டு மாவில் ஊற்றி ஒரு ஸ்பூன் விட்டு லட்டு மாவை கலந்து விடவேண்டும்.

ulunthu-lattu3

லட்டு மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் கையை வைத்து நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் லட்டு தயார். இது ஒரு வாரத்திற்கு கெட்டுப்போகாது. ஈரமில்லாத டப்பாவில் போட்டு தினமும் ஒரு லட்டு சாப்பிட்டு வாங்க. உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த நெய்யில் முந்திரி பாதாம் பொருட்களை வறுத்தும் லட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். லட்டு சாப்பிடும் போது, ஆங்காங்கே வறுத்த முந்திரி பருப்பு கடிபடும் போது, சுவை இன்னும் கூடுதலாக தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்