- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சாப்பாட்டு அரிசியில் சூப்பரான குஸ்கா ஒருவாட்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க. இந்த மாதத்தில் பிரியாணி...

சாப்பாட்டு அரிசியில் சூப்பரான குஸ்கா ஒருவாட்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க. இந்த மாதத்தில் பிரியாணி சாப்பிட முடியலங்குற வறுத்தம் கொஞ்சம் குறையும்.

- Advertisement -

இது புரட்டாசி மாதம் அசைவம் சமைக்க முடியாது. பிரியாணி சாப்பிட முடியலை என்கிற வருத்தம் கொஞ்சம் குறைவதற்கு வீட்டில் இருக்கும் சாப்பாடு அரிசியை வைத்து சுலபமான முறையில் ஒரு பிளைன் குஸ்கா எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்காக காசு செலவு பண்ணி பாசுமதி அரிசி வாங்க வேண்டாம். சீரகசம்பா அரிசி வாங்க வேண்டாம். சிம்பிளான இந்த சாப்பாட்டு அரிசி குஸ்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

rice5

முதலில் 1 கப் அளவு சாப்பாடு அரிசியை எடுத்து கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரசி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பட்டை – 2, ஏலக்காய் – 3, கிராம்பு – 2, அன்னாசிப்பூ – 1, பிரிஞ்சி இலை – 2, போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

onion-rice1

அடுத்தபடியாக நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 2, சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் – 6 சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் பொன்னிறம் வரவேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, பொடியாக நறுக்கிய தக்காளி பழங்கள் – 2 சேர்த்து, கரம் மசாலா – 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கி விட வேண்டும். இதில் ஊற்றி இருக்கும் எண்ணெய் தனியே பிரிந்து வர வேண்டும். இறுதியாக 1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூள், இதோடு சேர்த்து ஒரு முறை வதக்கி விட்டு, ஊற வைத்திருக்கும் அரிசியை குக்கரில் போட்டு 2 நிமிடங்கள் இந்த மசாலாவுடன் சேர்த்து கலக்கி விடுங்கள்.

rice7

அதன் பின்பு எப்போதும் போல 1 கப் அரிசிக்கு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, இந்த பிரியாணிக்கு தேவையான அளவு உப்பையும் போட்டு, நன்றாக கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதி வந்த பின்பு குக்கரை மூடி 3 விசில் விட வேண்டும். அவ்வளவு தான். கம கம வாசத்தோடு சாப்பாட்டு அரிசியில் சூப்பரான குஸ்கா தயாராகிவிட்டது. உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் ஒரு முறை உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்