- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெண்டைக்காயை இப்படி மொறுமொறுவென்று செய்து கொடுத்துப் பாருங்கள். வேண்டாம் என்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

வெண்டைக்காயை இப்படி மொறுமொறுவென்று செய்து கொடுத்துப் பாருங்கள். வேண்டாம் என்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -

காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதென்பது உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு எளிமையான வழி முறையாகும். உணவே மருந்து என்பது நமது முன்னோர் வாக்கு. அதற்கேற்ப காய்கறிகளை தவறாமல் உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு சிலர் காய்கறிகளை ஒதுக்குவது என்பதையே வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித காய்கறிகளையும் பிடிக்காது. ஆனால் ஒவ்வொரு காய்கறியையும் அவர்களுக்குப் பிடித்தமான வகையில் செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் உடம்பிற்கும், நமது மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுத்து உடலின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய வெண்டைக்காயை எப்படி சுவையாக மற்றவர் விருப்பப்படி செய்து கொடுக்க முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்

mullangi-3.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – அரை கிலோ, எண்ணெய் – கால் லிட்டர், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், சோள மாவு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
வெண்டைக்காய் எப்பொழுதும் சற்று குறுகுறுப்பு தன்மை அதிகமாக இருக்கும் எனவே அவற்றை முதலில் தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றை நீளவாக்கில் மெல்லியதாக அறிந்துகொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் அப்படியே வைத்துவிடவேண்டும்.

vendakkai

அதன்பிறகு வெண்டைக்காய் உடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் சோள மாவு, அரை ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த கலவைகள் அனைத்தும் வெண்டைக்காயுடன் நன்றாக சேருமாறு கலந்து விட்டு, மீண்டும் ஒரு முறை 10 நிமிடம் அப்படியே வைத்துவிடவேண்டும்.

- Advertisement -

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன்மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் எடுத்து எண்ணெயில் தூவி விட வேண்டும். இவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக சிவந்து பொரிந்ததும் கரண்டியைப் பயன்படுத்தி அவற்றை எடுத்து வேறு தட்டிற்க்கு மாற்றி வைக்க வேண்டும். இப்படி மீதமுள்ள அனைத்து வெண்டைக்காய் கலவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

vendaikai

இப்படி மட்டும் ஒரு முறை செய்து கொடுத்துக் கொடுத்துப் பாருங்கள். இந்த வெண்டைக்காய் வறுவல் மிகவும் மொறுமொறு வென்று அற்புதமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு கிரஸ்பியான உணவு வகைகள் என்றால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். எனவே இந்த வெண்டைக்காய் வறுவலை அனைவரும் தட்டாமல் சாப்பிடுவார்கள். வெண்டைக்காயின் கொழகொழப்பு தன்மை பிடிக்காமலும் பலர் இதனை ஒதுக்கி வைப்பார்கள். இப்படி செய்து கொடுப்பதன் மூலம் வெண்டைக்காயின் கொழுப்பு தன்மை பிடிக்காதவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

சற்று முன்