- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval2022-ஆம் ஆண்டு ஜோதிடப்படி பண விஷயத்தில் மோசமான பலன்களை பெறக்கூடிய ராசிக்காரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

2022-ஆம் ஆண்டு ஜோதிடப்படி பண விஷயத்தில் மோசமான பலன்களை பெறக்கூடிய ராசிக்காரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு கொண்டிருப்பதை அறிவோம். ஒரு வருடம் தொடர் நஷ்டத்தை சந்தித்து கொண்டிருந்தால், ஒரு வருடம் தொடர்ந்து லாபத்தை சந்தித்து கொண்டிருப்போம். பொதுவாக ஏற்ற, இறக்கமான சூழ்நிலை இருந்தாலும் பண விஷயத்தில் தொடர்ந்து லாபம் பெறுவது, தொடர்ந்து நஷ்டம் பெறுவதும் அந்தந்த ஆண்டுகளில் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஜோதிட கணிப்பின்படி பண விஷயத்தில் 2002-ஆம் ஆண்டு மோசமான பலன்களை பெற இருக்கிறார்கள்? என்பதை பொது பலனாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

astro-cash

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்தவர்கள் 2021-ஆம் ஆண்டை விட 2022-ஆம் ஆண்டு பண ரீதியாக அதிக பிரச்சனைகளை சந்திக்கும் ராசியாக இருப்பீர்கள். பாவ கிரகமான ராகு தங்கள் ராசிக்குள் நுழைய இருப்பதால் எதையும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதற்கு முக்கியமோ அதற்கு மட்டும் செலவு செய்வது அந்த ஆண்டை வளமானதாக செய்யும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்தவர்கள் 2022 ஆம் ஆண்டில் பண ரீதியாக பெரும் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. நாலு புறமிருந்து பணவரவு வந்தாலும், வந்த வழியே விரயமும் ஏற்படும். உங்களுக்கு தெரியாத விஷயங்களில் பணத்தை அதிக அளவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கையில் ரொக்கமாக வைத்திருப்பதை விட, வேறு வகையில் அதனை சொத்தாக மாற்றுவது நல்லது. திட்டமிட்டு செலவு செய்வது கடன் தொல்லையில் இருந்து பாதுகாக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு 2022-ஆம் ஆண்டு வெற்றியை நோக்கி பயணிக்க கூடிய நல்ல ஆண்டாக இருக்கும். எனினும் பண ரீதியான விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உங்களுடைய அலட்சியம், பல இழப்புகளை ஏற்படுத்தும். பணம் வைக்கும் இடம், கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது இழப்புகளை தடுக்கும். தேவையற்ற நபர்களுக்கு வக்காலத்து வாங்குவதை தவிர்க்கவும். கணவன், மனைவி இருவருமாக ஆலோசித்து எந்த ஒரு செலவையும் செய்வது மிகுந்த நன்மை கொடுக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசியில் பிறந்தவர்கள் 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் பல பிரச்சனைகளை பணம் ரீதியாக நீங்கள் சந்திக்க நேரலாம். ஏப்ரல் மாதம் உங்கள் ராசியிலிருந்து சனி பகவான் அடுத்த ராசிக்குப் பெயர்ச்சியாகும் பொழுது தேவையற்ற சிக்கல்களில் உங்களை மாட்டி விட வாய்ப்புகள் உண்டு எனவே நேர்வழியில் சம்பாதிப்பது நல்லது. சனிக்கிழமைகளில் சனி வழிபாடு செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்தவர்கள் 2021 ஆம் ஆண்டை விட 2022-ஆம் ஆண்டு நிதி நெருக்கடிகளை சந்திக்க வாய்ப்புகள் அதிகம். வீடு கட்டுவது, தொழில் துவங்குவது போன்ற பெரும் பணத்தை செலவழிக்கும் விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நேர்த்தியான திட்டமிடலும், தகுந்த நிபுணர்களின் ஆலோசனையும் இன்றி எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நல்லது. ஆண்டின் துவக்கத்தில் பணவரவு தாராளமாக இருப்பது போல இருந்தாலும், அடுத்தடுத்த காலங்களில் இது அப்படியே மாறும் என்பதால் முன்கூட்டியே உங்கள் செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது.

சற்று முன்