- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேர வீட்டில் பயன்படுத்தும் கடிகாரத்தை இப்படி கையாளுங்கள். இதனை சரியாக செய்வதன் மூலம் உங்கள்...

பணம் சேர வீட்டில் பயன்படுத்தும் கடிகாரத்தை இப்படி கையாளுங்கள். இதனை சரியாக செய்வதன் மூலம் உங்கள் பணக் கஷ்டங்கள் தீர்ந்து விடும்

- Advertisement -

நல்லவர் – கெட்டவர், நேர் – எதிர், துன்பம் – மகிழ்ச்சி, கோபம் – அமைதி, அதிகம் – குறைவு, நல்லது – கெட்டது இப்படி எல்லா செயல்களுக்கும் எதிர்வினைகள் இருக்கின்றன. அவ்வாறு நம்மை சுற்றி எப்போதும் நேர்மறை அதிர்வுகளும், எதிர்மறை அதிர்வுகளும் உலவிக் கொண்டிருக்கும். இவற்றில் எந்த அதிர்வலைகள் நம்மை அதிகமாக சூழ்ந்துகொண்டு இருக்கின்றனவோ அவ்வாறு தான் நமது வாழ்க்கை சூழலும் அமையும். எதிர்மறை அதிர்வுகள் அதிகமாக நம்மை சுற்றி இருந்தால் நமக்கு எப்பொழுதும் கஷ்டங்களும், துன்பங்களும், பிரச்சினைகளும் வந்துகொண்டிருக்கும். அதுவே நேர்மறை அதிர்வுகள் நம்மை சூழ்ந்து கொண்டிருந்தால் நமது குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம், மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும். இவ்வாறு எதிர்மறை அதிர்வுகளை குறைத்து நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கக் கூடிய ஒரு பொருள் தான் கடிகாரம். இதனை நாம் வசிக்கின்ற வீட்டில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

praying-god1

அனைவரது வீட்டிலும் இருக்கின்ற ஒரு பொருள் என்றால் அது கடிகாரம். இந்த கடிகாரத்தை அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு ஏற்றவாறு மாட்டி வைக்கின்றனர். அதுபோல இன்றைய தலைமுறையினர் கடிகாரத்தை விதவிதமான வடிவத்தில் வாங்கி வீட்டை அலங்கரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் இந்த கடிகாரம் அலங்கார பொருள் கிடையாது. வாஸ்துப்படி இதன் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

அவ்வாறு ஒரு திருமணத்திற்கு செல்லும் பொழுதும் அல்லது வீடு பால் காய்ச்சும் பொழுதும் பலரும் பரிசாகக் கொடுப்பது இந்த கடிகாரத்தை தான். ஏனென்றால் இந்த பொருள் ஒரு குடும்பத்திற்கு முக்கியமான ஒன்றாக அமைகிறது. இதனை நினைத்தபடியெல்லாம் சுலபமாக கையாளக்கூடாது. இதனை பயன்படுத்துவதற்கென்று தகுந்த வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அதனை பலரும் தெரிந்து கொள்வதில்லை.

marriage
Marriage matching

கடிகாரத்தை தவறியும் தெற்கு திசையில் மாட்டி வைக்கக் கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் தான் அதிகரிக்கும். இதனால் எப்போதும் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒரு சில வீடுகளில் வீட்டின் கதவிற்குப் பின்னால் கடிகாரத்தை மாற்றி வைப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பணம் விரயம் அதிகமாகும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் செய்யக்கூடிய தொழிலில் நஷ்டம் ஏற்படும். தேவையில்லாத செலவுகள் உண்டாகும். அவ்வாறு படுக்கை அறையில் மாட்டி வைக்கும் கடிகாரத்தை காலை எழுந்தவுடன் அதில் கண்டுபிடிக்கும்படி மாட்டி வைக்க வேண்டும். அதிலும் வடக்குத் திசையாக இருந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

wall clock 1-compressed

அவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் கிழக்கு திசையை பார்த்தவாறு கடிகாரத்தை மாட்டி வைப்பதே நேர்மறை அதிர்வுகளை அதிக அளவில் ஈர்க்க வல்லது. இது முடியாதவர்கள் வடக்கு திசை நோக்கி கடிகாரத்தை மாட்டி வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும்.

vasthu

வடக்கு திசையிலும் மாட்ட முடியாதவர்கள் வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில் மேற்கு திசை நோக்கி மாட்டி வைக்கலாம். ஆனால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தெற்கு திசை நோக்கி மட்டும் கடிகாரத்தை மாட்டி வைப்பதென்பதை தவிர்த்துவிட வேண்டும்.

சற்று முன்