- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி ஒரு ஹெல்தியான, சாஃப்டான, சூப்பரான சப்பாத்தியை இதுவரைக்கும் நீங்க கேள்வி கூட பட்டிருக்க மாட்டீங்க....

இப்படி ஒரு ஹெல்தியான, சாஃப்டான, சூப்பரான சப்பாத்தியை இதுவரைக்கும் நீங்க கேள்வி கூட பட்டிருக்க மாட்டீங்க. 10 நிமிடத்தில் வித்தியாசமான சப்பாத்தி ரெசிபி உங்களுக்காக.

- Advertisement -

சப்பாத்தியில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால், இந்த சப்பாத்தி முற்றிலும் வித்தியாசமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய, நாவிற்கு ருசி தரக்கூடிய சூப்பரான இந்த சப்பாத்தி ரெசிபி செய்வதில் எந்த கஷ்டமும் இல்லை. ரொம்ப ரொம்ப ஈசியா செஞ்சு முடிச்சிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தனை ருசி இருக்கும். இந்த சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் ஒரு தேங்காய் சட்னி அல்லது குருமா இப்படிப்பட்ட சைட்ஷை வைத்துக் கொள்ளலாம். அதுவும் நம்முடைய விருப்பம் தான். சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிப்பியை பார்க்கலாம்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் வேர்க்கடலை 1/2 கப், சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த வேர்கடலை ஆக இருந்தால் லேசாக சூடு செய்து கொள்ளுங்கள். இதோடு பாதாம் பருப்பு 10, வரமிளகாய் 3, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக சூடு செய்து கொள்ள வேண்டும். வறுத்த இந்த 3 பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வறுத்த இந்த மசாலா பொடியை ஒரு பவுலில் போட்டுக்கொள்ளுங்கள். இதோடு 2 கப் அளவு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு, சீரகப் பொடி 1/4 ஸ்பூன், சாட் மசாலா – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, இந்தப் பொருட்களையெல்லாம் மாவோடு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவையான சைஸில் இந்த மாவை எடுத்து உருண்டை பிடித்து, சப்பாத்தி கட்டையில் போட்டு தேய்த்து, உள்ளே கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, நான்காக மடித்து மீண்டும் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எப்போதும்போல சப்பாத்தி சுட்டு எடுத்தால், இந்த சப்பாத்தி அத்தனை சாஃப்ட்டாக இருக்கும். அத்தனை ருசியாக மசாலா வாசனையுடன் இருக்கும். வேர்கடலை, பாதாம் பருப்பு, எல்லாம் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் சப்பாத்தி.

- Advertisement -

கட்டாயம் இந்த சப்பாத்தியை நான்காக மடித்து தான் தேய்க்க வேண்டும். அதாவது சப்பாத்திக்கு உள்ளே கொஞ்சமாக எண்ணெய் தடவி முக்கோண வடிவில் மடித்து தேய்க்கும்போது, சப்பாத்தி சாஃப்டாக நமக்கு கிடைக்கும். அப்படியே வட்டவடிவில் எண்ணெய் எதுவும் நடவாமல், தேய்ப்பதாக இருந்தால், சப்பாத்தி மாவு பிசையும்போது கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வரைக்கும் வீட்ல இருக்கிறவங்க இப்படி ஒரு சப்பாத்தியை எங்கேயுமே டேஸ்ட் பண்ணியிருக்க மாட்டாங்க. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா, மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்