இனிப்பு பிடிக்காத குழந்தைகள் எவரும் இருக்க மாட்டார்கள். இனிப்பு சுவையோடு இருக்கும் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் இனிப்பு வகையான உணவுகளை செய்வதற்கு நேரம் அதிகமாக தேவைப்படும். இதனால் தான் பெண்கள் வீட்டில் அதிக அளவு இனிப்புகளை செய்வதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உளுத்தம் பருப்பை வைத்து ஒரு சுவையான ரெசிபியை நினைத்த உடனே சட்டென செய்துவிடமுடியும். அதிலும் இந்த ரெசிபி குழந்தைகளுக்குப் பிடித்த இனிப்பு சுவையில் இருக்கிறது. ஆகையால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தில் ஒரு கப் உளுத்தம் பருப்பை எடுத்து இப்படி சுவையான புட்டு செய்து கொடுங்கள். குழந்தைகளும் வந்த களைப்பு தீர இந்த சுவையான புட்டை ருசித்து மகிழ்ச்சி அடைவார்கள். வாருங்கள் இந்த உளுத்தம் மாவு புட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – ஒரு கப், அரிசி – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, நாட்டுச் சர்க்கரை – ஒரு கப், உப்பு – கால் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு கப் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கப் அரிசியை சரியான பதத்தில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ளப்படும் அரிசி புழுங்கல் அரிசி அல்லது பச்சை அரிசி இவை இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து வேண்டும்.
பிறகு கடாயில் ஒரு கப் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனை ஒரு தட்டில் இருக்கும் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதே போல் ஒரு கப் அரிசியை சேர்த்து, அதனை மிதமான தீயில் வறுத்து உளுத்தம் பருப்பு வைத்துள்ள அதே தட்டில் சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக ஆற வைக்க வேண்டும்.
பிறகு இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் சூடுபடுத்த வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் உளுத்த மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை கலந்து விடவேண்டும். கையில் பிடிக்கும் பொழுது கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் என்றால் சரியான பக்குவத்தில் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அடுப்பின் மீது வைத்து விட வேண்டும். அதன் பின் இட்லித் தட்டில் ஒரு ஈரத் துணியை விரித்து, அதன் மீது இந்த புட்டு மாவை வைத்து மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை மூடி தேங்காயைத் துருவி சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டால் சுவையான உளுத்தம் மாவு புட்டு தயாராகிவிடும்.