- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சூப்பரான தேங்காய் மாங்காய் துவையல். அடுப்பு பற்ற வைக்க வேண்டாம். 5 நிமிடத்தில் அரைத்து அசத்தலாம்...

சூப்பரான தேங்காய் மாங்காய் துவையல். அடுப்பு பற்ற வைக்க வேண்டாம். 5 நிமிடத்தில் அரைத்து அசத்தலாம் வாங்க.

- Advertisement -

மாங்காய் சீசன் அல்லவா. மாங்காயை வைத்து விதவிதமாக எப்படி சமைப்பது என்று தெரிந்து வைத்துக் கொள்வோம். மாங்காய் மலிவாக கிடைகங போது வாங்கி சுலபமாக சமைத்து சாப்பிட்டு இந்த சீசனை என்ஜாய் பண்ணலாம். சரி, அடுப்பை பற்ற வைக்காமல் சுலபமான முறையில் தேங்காய் மாங்காய் துவையல் எப்படி அரைப்பது என்பதைப் பற்றியும், மாங்காயுடன் ஒரு சில பொருட்களை வறுத்து சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக மாங்காய் துவையல் எப்படி அரைப்பது என்பதை பற்றியும், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 2 துவையல் ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க. வாங்க பார்க்கலாம்.

அடுப்பை பற்ற வைக்காமல் தேங்காய் மாங்காய் துவையல்:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1 கப் அளவு, வெட்டிய மாங்காய் – 1 கப் அளவு, கறிவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 4, வர மிளகாய் – 2, பூண்டு – 2 பல், தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 3 பல், உப்பு தேவையான அளவு, இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரப்பாக முதலில் ஒட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை மீண்டும் அரைக்க வேண்டும். மொழுமொழுவென அரைத்து விடக்கூடாது. கொரகொரப்பாக இந்த துவையலை அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். அவ்வளவு தான். தேங்காய் மாங்காய் துவையல் தயார். இதை சுடச்சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வேறு ஏதாவது கஞ்சி சாதம் போல வைத்தால் அதற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

இன்னொரு முறையில் மாங்காய் துவையல் ரெசிபி:
முதலில் மாங்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். 1 கப் அளவு மாங்காய் நமக்கு தேவைப்படும். இந்த மாங்காய் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கடாயில் – 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 6 போட்டு, பொன்னிறமாக வறுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அதன்பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் கடாயில் இருக்கும் வறுப்பட்ட பொருட்களை போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு தேவையான அளவு உப்பு, சர்க்கரை – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் முதலில் இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக வெட்டி வைத்திருக்கும் இரண்டு கைப்பிடி அளவு மாங்காயைப் போட்டு மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன் அளவு மட்டும் ஊற்றிக்கொண்டால் போதும். ஒன்றும் இரண்டுமாக இந்த துவையலை அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள்.

ஒருசிறிய தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, 1 ஸ்பூன் கடுகு போட்டு தாளித்து துவையலில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். வெள்ளை பருப்பு சாதம், தயிர் சாதத்தோடு, தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடாதீங்க. நல்லாவே இருக்காது. இரண்டு துவையலையும் மாங்காய் சீசன் முடிவதற்குள் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்