- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அனைவருமே தட்டாமல் விரும்பி சாப்பிடும் முட்டையில், இப்படி இரண்டு வகையான சுவையில் சூப்பரான பொடிமாஸ் செய்ய...

அனைவருமே தட்டாமல் விரும்பி சாப்பிடும் முட்டையில், இப்படி இரண்டு வகையான சுவையில் சூப்பரான பொடிமாஸ் செய்ய முடியும்

- Advertisement -

இன்றைய அவசர உலகத்தில் காலையில் எழுந்து, சமைத்து முடித்து, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நேரம் என்பது பத்தாமல் தான் இருக்கிறது. அவ்வாறு குழந்தைகளுக்கும், கணவருக்கும் மதிய உணவாக சாதம் சமைத்து, குழம்பு செய்து, பொரியல் செய்து கட்டிக் கொடுக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் நேரம் குறைவாக இருந்தால் அவசரத்திற்கு அப்பளம் அல்லது முட்டையை செய்வது தான் அனைவரது வீட்டிலும் பழக்கமாக இருக்கிறது. அவ்வாறு இவை இரண்டுமே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகள் ஆகும். அதிலும் முட்டை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும். அவ்வாறு முட்டையை வைத்து செய்யக்கூடிய இரண்டு விதமான பொடிமாஸ்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முட்டை பொடிமாஸ்: 1
முதலில் நான்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 3 பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பின்னர் இதனுடன் சிறிய துண்டு இஞ்சியை பொட்யாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக வெட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சீரகம் அல்லது சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக கலந்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் முட்டைகள் அனைத்தும் வெந்து உருண்டு வந்ததும், இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து விட்டால் போதும்.

- Advertisement -

முட்டை பொடிமாஸ்: 2
முதலில் 4 வெங்காயம், ஒரு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை எண்ணெயில் வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி கலந்து விட்டால் போதும். சுவையான முட்டை பொடிமாஸ் தயாராகிவிடும்.

சற்று முன்