- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இனி‌ பல்லி உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது. வீட்டிற்குள் இருக்கும் பல்லியையும் தலைதெறிக்க வெளியே...

இனி‌ பல்லி உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது. வீட்டிற்குள் இருக்கும் பல்லியையும் தலைதெறிக்க வெளியே ஓட வைக்க இந்த 1 பொருள் போதும்.

- Advertisement -

நம்மில் நிறைய பேர் வீட்டில் இந்த பல்லி தொந்தரவு அதிகமாக இருக்கும். பீரோவுக்கு அடியில், துணி மணி அடிக்கி வைத்திருக்கும் அலமாரியில், குறிப்பாக சமையலறையில் இந்த பல்லிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். நிறைய புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தால் அந்த இடுக்குகளிலும் பல்லி தொந்தரவு அதிகமாக இருக்கும். என்னதான் செய்தாலும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. முட்டை ஓடு, மயிலிறகு இப்படிப்பட்ட பொருட்கள் இல்லாமல் புதியதாக மூன்று குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதல் குறிப்பு:
இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் காபி பவுடர். நீங்கள் காபி போடுவதற்காக எந்த காப்பி தூளை பயன்படுத்தினாலும் சரி அதையே குறிப்புகு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபி பவுடர், 1/4 ஸ்பூன் தனி கார மிளகாய் தூள், போட்டு இரண்டு சொட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இந்த கலவையை பல்லி வரக்கூடிய இடத்தில் ஆங்காங்கே வைத்தால் போதும். பல்லி அந்த இடத்தை விட்டு போய்விடும். தனி மிளகாய் தூளுக்கு பதிலாக மூக்குப்பொடி இருந்தாலும் இந்த காபி பொடியில் கலக்கலாம்.

- Advertisement -

இரண்டாவது குறிப்பு:
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தோலுடன் நான்கைந்து பூண்டுப் பல்லைப் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பூண்டு விழுதை வடிகட்டி வெறும் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில் தண்ணீராக பூண்டு சாறு கிடைத்திருக்கும் அல்லவா.

1/4 கப் அளவு பூண்டு சாறுடன், 1 டம்ளர் அளவு தண்ணீரைக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி இதை உங்களுடைய வீட்டின் மூலை முடுக்குகளில் ஸ்ப்ரே செய்து வைத்தால், இந்த பூண்டு வாடைக்கு பல்லி மூலைமுடுக்குகளில் தங்காது. இதோடு மட்டுமல்லாமல் ஜன்னல் பகுதியிலும் இந்த ஸ்பிரே அடித்து வைக்கலாம். ஜன்னலின் வழியாக வீட்டிற்குள் பல்லி வராமல் இருக்கும்.

- Advertisement -

நகர்த்தாமல் சில பொருளை ஒரே இடத்தில் வைத்திருப்போம் அல்லவா. அந்த இடத்தில்தான் பல்லி பிரச்சனை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் பூண்டு ஸ்பிரே வை அடித்து வையுங்கள். குறிப்பாக பரண் மேலே இருக்கக்கூடிய அட்டைப் பெட்டிகளின் இடுக்குகளில் கூட இந்த பல்லி தொல்லை இருக்கும். அந்த அட்டைப் பெட்டிகள் மேலே பூண்டு ஸ்பிரே அடித்து வைத்தால் பூண்டு வாசம் இருக்கும் வரை அந்த இடத்தில் பல்லிகள் வந்து தங்காது.

மூன்றாவது குறிப்பு:
பெரும்பாலும் இந்த குறிப்பு நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். வெங்காயத்தின் வாடை பல்லிக்கு பிடிக்காது. ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக வெட்டி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு திறந்தபடி, பல்லி இருக்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டால் போதும் அந்த இடத்தில் பல்லி தங்காமல் வெளியேறிவிடும். உங்களுக்கு மேலே சொன்ன குறிப்புகள் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்