- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நமது பாரம்பரிய உணவான பணியாரத்துடன் அவல் சேர்த்து ஒருமுறை சுவையான இனிப்பு பணியாரம் செய்து பாருங்கள்,...

நமது பாரம்பரிய உணவான பணியாரத்துடன் அவல் சேர்த்து ஒருமுறை சுவையான இனிப்பு பணியாரம் செய்து பாருங்கள், செய்து வைத்த பணியாரத்தில் ஒன்று கூட மிச்சமில்லாமல் முழுவதுமாக காலியாகிவிடும்

- Advertisement -

நமது பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளையும் சமைத்து கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பீட்சா, பர்கர், ஷவர்மா என்று பலவித ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விருப்பமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றின் மூலம் பலவித நோய்களும், ஒரு சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அவர்கள் சாப்பிடும் உணவுகளை அதிகப்படுத்தாமல், முடிந்தவரை பெற்றோர்கள் அவற்றை குறைத்துக் கொண்டே வரவேண்டும். எனவே வீட்டில் அவர்களுக்கு சுவையான உணவுகளை செய்து கொடுத்துப் பழகுங்கள். அவ்வாறு மிகவும் எளிமையாகவும், ஆரோக்கியமாகவும், சுவை மிகுந்ததாகவும் செய்யக்கூடிய உணவு வகைகளில் ஒன்றுதான் இந்த குழிப்பணியாரம். இதனை அவல் சேர்த்து இப்படி ஆரோக்கியமான உணவாக செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த அவல் பணியாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – ஒரு கப், அவல் – ஒரு கப், வெல்லம் – ஒரு கப், எண்ணெய் – 50 கிராம், நெய் – 50 கிராம், தேங்காய் – கால் மூடி, சோடா உப்பு – அரை ஸ்பூன், உப்பு – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மற்றும் ஒரு கப் அவலை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து இரண்டு முறை சுத்தமாக கழுவி, வடிகட்டி விட வேண்டும். அதன் பின்னர் இவற்றுடன் முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இவை நன்றாக ஊறியதும் இவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அரிசி மற்றும் அவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு கப் வெல்லத்தையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அரைத்து வைத்துள்ள மாவுடன் அரை ஸ்பூன் சோடா உப்பு, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். இவற்றில் இனிப்பு போதவில்லை என்றால் இவற்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளலாம். இவற்றுடன் கால் மூடி தேங்காயைத் துருவி சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் நெய் மற்றும் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது குழிப்பணியாரக் கல்லை வைக்க வேண்டும். கல் நன்றாக சூடானதும் அதில் ஒவ்வொரு குழியிலும் லேசாக நெய் மற்றும் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து அனைத்து குழிகளிலும் ஊற்றிவிட வேண்டும். பின்னர் இவற்றை திருப்பிப் போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுத்து விட வேண்டும்.

சற்று முன்