பட்டர் முறுக்கு தீபாவளி நேரங்களில் செய்யப்படும் ஒரு சுவையான முறுக்கு வகை. இது சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்னாக். பண்டிகைக் காலங்கள் தவிர மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கவும் விருந்தினர்களை உபசரிக்கவும் ஏற்றது. அதேபோல் பட்டுக்கடலை முறுக்கையும் நினைத்த உடனே சட்டுன செய்ய முடியும் இதை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்களின் உடல் நலத்திற்கு இவை பெரிதும் உதவுகிறது. இந்த இரண்டு முறைகளையும் மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விட முடியும். நீங்களும் சுவையான பட்டர் முறுக்கு மற்றும் பொட்டுக்கடலை முறுக்கை சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
பட்டர் முறுக்கு தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப், கடலை மாவு – 1/2 கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்,
உப்பு – 3/4 ஸ்பூன், வெண்ணை – 1/4 கப், சீரகம் – 1 ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்கைகளால் நன்கு கலந்து விடவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மென்மையாக பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், முறுக்கு அச்சில் மாவை சேர்த்து பிழிந்துவிடவும்.இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பட்டர் முறுக்கு தயாராகி விடும்.
பொட்டுக்கடலை முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
பொட்டுகடலை – 1/4 கப், அரிசி மாவு – 1 கப், பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், ஓமம் – 3/4 ஸ்பூன், உருக்கிய வெண்ணெய் – 1 ஸ்பூன், உப்பு – 3/4
ஸ்பூன், சமையல் எண்ணெய் – 250 கிராம்.
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பட்டர் முறுக்கு தீபாவளி நேரங்களில் செய்யப்படும் ஒரு சுவையான முறுக்கு வகை. இது சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்னாக். பண்டிகைக் காலங்கள் தவிர மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கவும் விருந்தினர்களை உபசரிக்கவும் ஏற்றது.
அதேபோல் பட்டுக்கடலை முறுக்கையும் நினைத்த உடனே சட்டுன செய்ய முடியும் இதை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்களின் உடல் நலத்திற்கு இவை பெரிதும் உதவுகிறது. இந்த இரண்டு முறைகளையும் மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விட முடியும். நீங்களும் சுவையான பட்டர் முறுக்கு மற்றும் பொட்டுக்கடலை முறுக்கை சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.