- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 20 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 20 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்து வந்த தடைகளை தாண்டி சாதிப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. வியாபாரத்தில் கடனுக்கு எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். நண்பர்கள் தானே, தெரிந்தவர்கள் தானே என்று நம்பி, இன்று ஏமாறுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். சுகபோக வாழ்க்கை தான். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் சுகமான அனுபவங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு வெளிப்படும். மகாலட்சுமி வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். டென்ஷன் குறையும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் சில பேருக்கு உண்டு. நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். காரிய தடை விலகும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்க துவங்கும். மன நிம்மதியை இழந்தவர்கள், இன்று மன அமைதியை பெறுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. நீண்ட தூர பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். தேவையில்லாத செலவுகள் குறையும் சேமிப்பு உயரும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பெயர் புகழ் கூடும். எந்த இடத்தில் மரியாதை இழந்து தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் ஜெயித்து காட்டுவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன நிம்மதி கிடைக்கும்‌. எதிரிகள் உங்களுடைய நண்பர்களாக மாறுவார்கள். பல நாள் தொல்லை சரியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யுங்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கலாம். நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். ஆரோகிய ரீதியான பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வரும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். தேவையில்லாத சிக்கல்கள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் மனநிறைவு இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நல்லது. இல்லை என்றால் எதிர்காலத்தில் பண கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாளில் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திப்பீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக அமையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை இருக்கும். வேலை செய்யும் இடத்திலேயே புதிய எதிரிகள் உருவாகலாம். உங்களை வீழ்த்த வேண்டும் என்று நிறைய பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். வீண் பழி உங்கள் மேல் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எந்த இடத்திலும் பொய் சொல்ல வேண்டாம். நேர்மையாக இருப்பது நல்லது.

சற்று முன்