- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்காக்கிநாடா ஸ்டைலில் கத்திரிக்காய் பொரியலை இப்படி செய்த உடனேயே காலியாகிடும். இதுவரைக்கும் இப்படி ஒரு கத்திரிக்காய்...

காக்கிநாடா ஸ்டைலில் கத்திரிக்காய் பொரியலை இப்படி செய்த உடனேயே காலியாகிடும். இதுவரைக்கும் இப்படி ஒரு கத்திரிக்காய் ரெசிபியை நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க.

- Advertisement -

இதுவரைக்கும் கத்தரிக்காய் பொரியலை இப்படி செய்து யாரும் சுவைத்திருக்கவே மாட்டீர்கள். அப்படி ஒரு புதுமையான ரெசிபி தான் இது. சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும், ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்டாலும், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டாலும் இந்த கத்திரிக்காய் பொரியல் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். கமகம வாசத்தோடு காக்கிநாடா ஸ்டைலில் கத்திரிக்காய் பொரியல் எப்படி செய்வது. நேரத்தை கடத்தாமல் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 4 ஸ்பூன் அளவு கடலைப்பருப்பை போட்டு, தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். ஊறியவுடன் தண்ணீரை வடிகட்டி விட்டு கடலை பருப்பை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் – 1/2 கப், இஞ்சி தோல் சீவி நறுக்கியது – 2 இன்ச், பச்சை மிளகாய் – 2, சீரகம் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய தோல் உரித்த பூண்டு பல் – 10, ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு சேர்த்து, நன்றாக எண்ணெயில் வறுத்து விட்டு, அதன் பின்பு கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிய கத்திரிக்காய் – 3 சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி, கத்தரிக்காயை முக்கால் பாகம் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காய் முக்கால் பாகம் வெந்து வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கத்திரிக்காயில் ஊற்றி கலந்து தேவைப்பட்டால் கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாக டிரை ஆகும் வரை வதக்கி விட வேண்டும். சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான். கத்திரிக்காயில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி, மசாலா கத்திரிக்காயோடு ஒட்டி பிடித்து, ட்ரையாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். (கத்தரிக்காய் ரொம்பவும் வெந்து கொழ கொழவென ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

இறுதியாக ருசித்து பாருங்கள். உங்களுக்கே தெரியும். கமகம வாசத்தோடு அருமையான கத்திரிக்காய் பொரியல் தயாராகி இருக்கும். இப்படி ஒரு கத்திரிக்காய் பொரியல் மிஸ் பண்ணாதீங்க. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவாங்க.

பின்குறிப்பு: இந்த கத்திரிக்காய் பொறியலுக்கு காரம், பச்சை மிளகாய் மட்டும்தான். மிளகாய் தூள் சேர்க்கப்போவது கிடையாது. உங்களுக்கு தேவைப்பட்டால் பச்சை மிளகாய் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கூட சேர்த்துக் கொள்ளலாம்.

சற்று முன்