- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கடைகளில் நிறைய காசு கொடுத்து வாங்கும் இந்த மையோனிஸை நம்முடைய வீட்டிலேயே ரொம்ப ரொம்ப ஈஸியா...

கடைகளில் நிறைய காசு கொடுத்து வாங்கும் இந்த மையோனிஸை நம்முடைய வீட்டிலேயே ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாமே.

- Advertisement -

பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்க கூடிய ஷவர்மா, தந்தூரி, சில்லி, இன்னும் இது போன்ற பல வெரைட்டிகளுக்கு சைட் டிஷ் ஆக மையோனிஸ் தான் கொடுக்கிறார்கள். இதற்கு சைடு டிஷ்ஷாக தரப்படும் இந்த மையோனிஸ் எந்த எண்ணெயில் எப்போது, எப்படி செய்தார்களோ என்று நமக்குத் தெரியாது. ஆனால் கட்டாயமாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பது மட்டும் உண்மை.

இது போன்ற உணவுகளை நாம் வாங்கி கொடுப்பது என்பது சொந்த செலவில் சூனியம் வைப்பது போல தான். தந்தூரி, ஷவர்மா போன்ற வெரைட்டிகளை நம்மால் வீட்டில் செய்ய முடியாமல் கடைகளில் வாங்கினாலும் கூட, குறைந்தது இது போன்ற சில உணவுகளையாவது நாம் வீட்டிலயே செய்யலாம். குழந்தைகளின் உடலுக்கு பெரிதளவில் தீங்கு விளைவிக்காது, அதே நேரத்தில் செலவும் குறைவு.

- Advertisement -

தேவையான பொருட்கள்: முட்டை – 2, ரீஃபைண்ட் ஆயில் – 3 கப், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 5 பல், உப்பு -1/4 டீஸ்பூன், சர்க்கரை – 1/2 டீஸ்பூன், எலும்பிச்சை பழ சாறு – 4 டீஸ்பூன்.

முதலில் இரண்டு முட்டையை மிக்ஸி ஜாரில் சேர்த்து விடுங்கள். பிறகு மிளகு ஒரு டேபிள் ஸ்பூன் (வெள்ளை மிளகு இருந்தால் இன்னும் சுவை நன்றாக இருக்கும்). பூண்டு ஐந்து பல், (மிளகு பூண்டு சேர்ப்பதால் வாடை வராது) உப்பு கால் டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன் இதை அனைத்தும் சேர்த்து விட்டு கடைசியாக எலும்பிச்சை பழ சாறும் சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் அரைக்கும் போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். முதலில் லோ டு ஹை ஸ்பீட் (low to high) ஒரு சுற்று விட்டு விட்டு, மறுபடியும் ஹை டு லோ ( high to low ) என்றவாறு அறிக்கை வேண்டும். (இதில் அரைக்கும் முறை மிகவும் முக்கியம்). இப்பொது மிக்ஸி ஜாரையை திறந்து பாருங்கள், நாம் சேர்த்த அனைத்தும் ஒன்றாக கலந்திருக்கும்.

இப்போது இதில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி (நல்லெண்ணெய், கடலெண்ணெய், போன்ற வாசனை உள்ள எண்ணெய்களை பயன் படுத்த வேண்டாம்). அதே போல் மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமிருக்கும் 1 கப் எண்ணெய் ஊற்றி இதே முறையில் அரைத்துக் கொள்ளுங்கள். இதே போன்று மூன்றாவது முறை ஒரு கப் எண்ணெயயை முழுவதுமாக ஊற்றி விட வேண்டாம். (எவ்வளவு உங்களுக்கு திக்காக தேவையோ அந்த அளவிற்கு எண்ணெயை ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். மீதம் எண்ணெய் இருந்தாலும் அதை நிறுத்திக் கொள்ளலாம். மூன்று கப் எண்ணெயையும் கட்டாயமாக இதில் ஊற்றி அரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைப்படுபவர்கள் 2 1/2 கப் எண்ணெயோடு கூட நிறுத்திக் கொள்ளுங்கள்.)

அவ்வளவு தான். நம் கையால் செய்த மயோனிஸ் தயார். இது மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். உங்களுக்கு எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது உடனடியாக வீட்டிலே தயார் செய்து விடலாம். இதற்காக அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்கி ஆரோக்கியத்தையும் கொடுத்துக் கொள்ள வேண்டாம்.

சற்று முன்