நம் எல்லோர் வீட்டிலும் தேங்காயை துருவி விட்டு அந்த கொட்டாங்குச்சியை எடுத்து குப்பையில் தான் தூக்கி போடுவோம். கொட்டாங்கோச்சியை பயனுள்ளதாக வீட்டில் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எந்த குறிப்பிற்கு நீங்கள் கொட்டாங்குச்சியை பயன்படுத்துவதாக இருந்தாலும் கொட்டாங்குச்சிக்கு மேலே இருக்கும் அந்த சின்ன சின்ன நார்களை சுத்தமாக நீக்கிவிட வேண்டும். கொட்டாங்குச்சியை கவிழ்த்து போட்டு, அதன் மேலே ஒரு ஸ்டீல் நாரை அல்லது உப்பு காகிதத்தை வைத்து தேய்த்தாலே அந்த மொத்த தூசியும் உதிர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு 1:
அரிசி மூட்டையில் ஆழாக்கு பயன்படுத்துவது போலவே, ஒரு கொட்டாங்குச்சியை அரிசி மூட்டையிலேயே எப்பவும் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை மூட்டையில் இருந்து எடுப்பதற்கும் இந்த கொட்டாங்குச்சி பயன் படும். அதே போல நிறைய அரிசியில் கொட்டாங்குச்சிகளை புதைத்து வைக்கும் போது, அரிசியில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து வண்டு பூச்சிகள் வராமலும் தடுக்கும். நீண்ட நாட்களுக்கு அரிசி பூசனம் பிடிக்காமல் சூப்பரா இருக்கும்.
குறிப்பு 2:
சுத்தம் செய்த இந்த கொட்டாங்குச்சிகளை உள்பக்கமும் கொஞ்சம் நன்றாக சுரண்டி கழுவி கொள்ளுங்கள். அதாவது உள்ளே லேசாக ஒட்டி இருக்கும் தேங்காய் கூட காய்ந்த பின் எடுத்தால் சுத்தமாக நீங்கிவிடும். சுத்தம் செய்த கொட்டாங்குச்சிக்கு உள்ளே கொஞ்சமாக எண்ணெயை தடவி அதில் இட்லி மாவை ஊற்றி எப்போதும் போல, இட்லி தட்டின் மேல் வைத்து ஆவியில் வேகவிட்டால் சூப்பரான குண்டு குண்டு இட்லி, பஞ்சு போல நமக்கு கிடைக்கும். இப்படி கொட்டாங்குச்சியில் இட்லி ஊற்றி வைக்கும் போது வேகக்கூடிய நேரத்தை மட்டும் கொஞ்சம் அதிகப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நிறைய பேர் வீட்டில் இருந்தால் ஆளுக்கு ஒரு இட்லி கொடுத்தாலே போதும் வைர நிரம்பி விடும். கொட்டாங்குச்சியில் வேக வைக்கும் இட்லிக்கு தனி ருசியும் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்பு 3:
இட்லியோட கிடைக்காதுங்க. ராகி புட்டு, அரிசி மாவு புட்டு என்று கூட இந்த கொட்டாங்குச்சியில் வைத்து வேக வைக்கலாம். எப்போதும் போல புட்டுக்கு மாவை தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு கொட்டாங்குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு லேயர் தேங்காய் துருவல், ஒரு லேயர் புட்டு மாவு, ஒரு லேயர் நாட்டுச்சர்க்கரை. மீண்டும் ஒரு லேயர் தேங்காய் துருவல், புட்டு மாவு, நாட்டு சர்க்கரை என்று போட்டு, புட்டு மாவு நிரப்பிய இந்த கொட்டாங்குச்சிகளை, இட்லி குண்டானில் இட்லி தட்டின் மேல் வைத்து வேக வைத்து எடுத்தாலே சூப்பரான புட்டு தயாராகி இருக்கும். தேவைப்பட்டால் குக்கர் விசில் போடாமல், ஆவி வரும் அல்லவா, அந்த ஆவி வரும் ஓட்டையில் கூட கொட்டாங்குச்சியை சொருகி பூட்டை வேக வைக்கலாம். (குக்கருக்கு உள்ளே மறக்காம தண்ணீரை ஊற்றி இப்படி பொட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.) புட்டு வெந்தவுடன் இந்த கொட்டாங்குச்சியை எடுத்து அப்படியே தட்டில் தலைகீழாக கவிழ்த்தால் வேற லெவல் டேஸ்ட் புட்டு கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்பு 4:
நிறைய பேர் வீட்டில் உப்பு ஜாடியில் உப்பு நீர்த்துப்போகும். கல் உப்பாக இருந்தாலும், தூள் உப்பாக இருந்தாலும் கொட்டாங்குச்சிகளை உடைத்து அந்த உப்புக்கு நடுவே போட்டு வைத்தால் உப்பு நீண்ட நாட்களுக்கு தண்ணீர் விடாது.
குறிப்பு 5:
உடைந்து போன கொட்டாங்குச்சிகளை எல்லாம் கூட தூக்கிப் போடாதீங்க. இதை வைத்து சூப்பராக வீட்டில் சாம்பிராணி புகை போடலாம். சாம்பிராணி போடும் தூப காலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கம்ப்யூட்டர் சாம்பிராணி வைத்து அதன் மேலே ஒரு கற்பூரத்தை வைத்து கொளுத்தி விடுங்கள். இப்போது இந்த நெருப்பின் மேலே உடைந்த கொட்டாங்குச்சி துண்டுகளை போட்டால் நெருப்பு நன்றாக கொட்டாங்குச்சியில் பிடித்துக் கொள்ளும். தீ சூப்பராக இருக்கும். இதன் மேலே சாம்பிராணி துளைத்துவி புகை போட்டால் சூப்பராக புகை வரும்.
குறிப்பு 6:
சின்ன சின்ன பாட்டிலில் எண்ணெய் ஊற்றுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அந்த சின்ன பாட்டிலுக்கு மேலே, ஓட்டை உள்ள கொட்டாங்குச்சியை வைத்து எண்ணெய் ஊற்றினால் சுலபமாக எண்ணெய் கீழே ஊட்டாமல் பாட்டிலுக்குள் மட்டும் நிரம்பும். புனல் போல இந்த கொட்டாங்குச்சிகளை பயன்படுத்தலாம்.
குறிப்பு 7:
கருவேப்பிலை கொத்தமல்லி இன்னும் ஏதாவது ஒரு காய்கறியை தண்ணீரில் போட்டு கழுவி அலசி எடுத்திருப்போம். அந்த தண்ணீரை வடியவைப்பது ரொம்ப சிரமமாக இருக்கும். ஓட்டை உள்ள கொட்டாங்குச்சியில் கழுவிய பொருட்களை போட்டு, ஒரு டம்ளர் மேல் நிற்க வைத்தால் பொருட்களில் இருக்கும் தண்ணீர் சுத்தமாக வடிந்து நமக்கு கிடைத்துவிடும். இதற்கு ஓட்டை உள்ள கொட்டாங்குச்சியை பயன்படுத்துங்கள்.