இதை குண்டூர் ஸாடைல் வடை என்று சொல்லுவார்கள். ஆனால் இதில் கடலைப்பருப்பு சேர்க்கப் போவதில்லை. வேறு ஒரு வித்தியாசமான பொருளை சேர்க்கப் போகின்றோம். கடலைப்பருப்பு சேர்க்கவில்லை என்றால், வேறு என்ன இதில் சேர்க்கலாம். உங்களால் கெஸ் பண்ண முடியுதா? யோசிச்சுக்கிட்டே இந்த ரெசிபிக்குள் செல்வோம். இப்படியும் ஒரு மசால் வடை செய்து ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் வாங்க. இந்த வடையை எந்த சீக்ரெட் பொருள் சேர்த்து செய்யப் போகின்றோம் என்று டக்குனு பார்த்து விடலாம்.
சோளம் மற்றும் கீரை தாங்க. ஸ்வீட் கான். வேக வைக்கக் கூடாது. பச்சையாக இருக்கக்கூடிய ஸ்வீட் கானை வைத்து தான் இன்றைக்கு கீரை வடை செய்யப் போகின்றோம். நேரத்தை கடத்தாமல் ஒரு மிக்ஸிர ஜாரை எடுத்துக்கோங்க. பச்சை மிளகாய் – 3, வரமிளகாய் – 2, தோலுரித்த பூண்டு பல் – 5, தோல் சீவி நறுக்கியது இஞ்சி – 1 இன்ச், மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், ஸ்வீட் கான் – 2 பெரிய கைப்பிடி இந்த எல்லா பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த விழுதோடு அரிசி மாவு – 2 இரண்டு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய சிறு கீரை – 1 பெரிய கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு, போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து இதை மசால் வடை போலவே உருட்டி தட்டி நன்றாக காய்ந்திருக்கும் எண்ணெயில் போட்டு அப்படியே சுட சுட வடையை சுட்டு சாப்பிட்டு பாருங்கள்.
அத்தனை அருமையாக இருக்கும். இது கூட ஏதாவது ஒரு சட்னி தொட்டுக்கோங்க. இதனுடைய சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். உடலுக்கு இந்த வடை ஆரோக்கியம் தானே. ஸ்வீட் கான் சேர்த்து இருக்கின்றோம். கீரை சேர்த்திருக்கின்றோம். வேற என்ன வேண்டும்.
இந்த வடைக்கு சிறுகீரை தான் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முருங்கைக்கீரை பாலக்கீரை அரைக்கீரை போன்று எந்த கீரை இருந்தாலும் இந்த வடையில் சேர்த்து சுட்டுப் பாருங்க. செம டேஸ்டா இருக்கும். அதோட முக்கியம் இது ரொம்ப ரொம்ப ஆரோக்கியம்.
இதையும் படிக்கலாமே: வெறும் 10 ரூபாய் செலவில் சூப்பரான இந்த ஐஸ்கிரீம் நம்ம வீட்டிலேயே செஞ்சு அசத்தலாம்.
பின்குறிப்பு: கட்டாயமாக இதற்கு வேக வைக்காத ஸ்வீட் கான் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் காயாத போது வடையை எண்ணெயில் போட்டால் எண்ணெய் நிறைய குடித்து விடும். அடுப்பை ஃபுல் ஃபிலிமில் வைத்து நன்றாக காய்ந்த எண்ணெயில் இந்த வடையை போடுங்க. பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து வடையை சிவக்க விட்டு எடுங்க. அப்போதுதான் உள்ளே நன்றாக வெந்திருக்கும்.