வெறும் 10 ரூபாய் செலவில் சூப்பரான இந்த ஐஸ்கிரீம் நம்ம வீட்டிலேயே செஞ்சு அசத்தலாம்.

icecream
- Advertisement -

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இதில் குழந்தைகள் பெரியவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இந்த ஐஸ்கிரீம் விஷயத்தில் கிடையாது. எல்லோருக்கும் பிடித்த இந்த ஐஸ்கிரீமை, நாம் வீட்டில் தினமும் உபயோகப்படுத்தும் ஒரே ஒரு பிஸ்கட் பாக்கெட் கொண்டு எளிமையான முறையில் அதிக செலவும் இல்லாமல் செய்து கொடுக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். இப்படி யோசிக்கிறதோட நிறுத்திடாமல் உங்க வீட்ல இருக்க பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து உடனே ஐஸ்கிரீம் செய்ய தயாராகிடுங்க. எப்படி செய்யறது என்ற ரெசிபியை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பால் – 1/2 லிட்டர், மில்க் பிஸ்கட் 1 பேக், காபித்தூள் – 2 டீஸ்பூன், சர்க்கரை – 8 டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் பிஸ்கட்டை உடைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக நைசான பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது கூட கொரகொரப்பாக இல்லாமல் நல்ல நைஸ் பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே ஜாரில் இரண்டு ஸ்பூன் காப்பித்தூள், எட்டு ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பிஸ்கட், காப்பித்தூள், சர்க்கரை மூன்றும் சேர்த்து பவுடராக கிடைத்திருக்கும். இதை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்து விடுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை லிட்டர் திக்கான பால் தண்ணீர் கலக்காமல் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக கொதித்து வந்தவுடன் எடுத்து வைத்துள்ள பிஸ்கட் பவுடரை இந்த பாலில் கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாலும் பிஸ்கட் பவுடரும் சேர்ந்து கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். இப்போது ஐஸ் கிரீம் தயாராகி விட்டது. (ஆனால் இதை அப்படியே சாப்பிட கூடாது. ஐஸ் கிரீம் பதம் வர இதோ அடுத்த செய்முறை அதையும் செய்த பின் தான் இந்த ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும்).

- Advertisement -

இறக்கி வைத்த ஐஸ் கிரீம் நன்றாக ஆறிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு ஸ்டோரேஜ் பாக்ஸில் ஊற்றி ஃப்ரீசரில் ஒரு ஐந்து மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு ஐந்து மணி நேரம் கழித்து மறுபடியும் எடுத்து ஒரு பத்து நிமிடம் வெளியில் வைத்தால் ஐஸ் கட்டியாக உள்ள ஐஸ் கிரீம் சற்று இளகி இருக்கும். இதை மறுபடியும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து அதே ஸ்டோரேஜ் பாக்ஸில் ஊற்றி மீண்டும் ஃப்ரீசரில் ஒரு எட்டு மணி நேரம் வைத்து பிறகு எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் சூப்பரான மில்க் பிக்கீஸ் சாக்லேட் ஐஸ்கிரீம் ரெடி.

இதையும் படிக்கலாமே: சப்போட்டா பழத்துல அல்வா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லனா இப்போ ட்ரை பண்ணுங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

இந்த ஐஸ் கிரீம் மேல் உங்களுக்கு தேவைப்பட்டால் அலங்காரத்திற்கு நட்ஸ் ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இதன் சுவை நன்றாகவே இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

- Advertisement -