- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெள்ளை பூசணிக்காவில் இப்படி ஒரு சூப்பரான தயிர் குழம்பு வைக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?...

வெள்ளை பூசணிக்காவில் இப்படி ஒரு சூப்பரான தயிர் குழம்பு வைக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? கேரளாவில் இந்த சீக்ரெட் பயன்படுத்தி தான் இந்த குழம்பை வைப்பார்களாம்.

- Advertisement -

நம் சமையல் முறையே மாநிலத்தின் அடிப்படையில் தான் பிரபலம் ஆகிறது என்று சொல்லலாம். நல்ல காசாரமான உணவு என்றல் அது ஆந்திராவில் பிரபலம். புட்டு, அவியல் இப்படியான உணவுகளுக்கு கேரளா. தமிழ்நாட்டு உணவு என்றாலே நாம் சாம்பார், ரசம், காரக்குழம்பு இப்படியான குழம்புகள் தான். இப்படி நாம் உண்ணும் உணவு நாம் வாழும் இடத்திற்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் மிகவும் பிரபலமான இந்த தயிர் குழம்பை நாமும் அதே சுவையில் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை வைத்து அருமையான ஒரு குழம்பு ரெசிபியை தான் இப்போது இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்: தயிர் – 1/2 லிட்டர், வெள்ளைப் பூசணிக்காய் – 1/2 கிலோ, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய்- 8 ,காய்ந்த மிளகாய் -3, இஞ்சி -1 துண்டு, பூண்டு-3 பல், சீரகம் -1 டீஸ்பூன், கடுகு -` டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், தேங்காய் துருவியது – 1/4 கப், தேங்காய்எண்ணெய் -2டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து.

- Advertisement -

தயிர் குழம்பிற்கு முதலில் பூசணிக்காவை நறுக்கி தனியாக வேக வைக்க வேண்டும் வேக வைக்கும் போது அதில் இரண்டு பச்சை மிளகாய் கீறிப்போட்டு நான்கு கறிவேப்பிலை இலையும் அதில் உறுதி சேர்த்து வேகவைத்து கொள்ளுங்கள். வேகவைக்கும் போது பூசணிக்காய் அதிகமாக வெந்துவிடவும் கூடாது அதே நேரத்தில் வேகாமல் இருக்கும் ஒரு முக்கால் பதம் கரை வேகம் படி பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்த குழம்பிற்கு அழைக்க வேண்டியவைகளை எடுத்துக் கொள்வோம் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், இஞ்சி, 4 பச்சை மிளகாய், சீரகம் அரை ஸ்பூன் சேர்த்து ஒரு 90% வரை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். லேசான கொரகொரப்பு தன்மையுடன் இருந்தால் நன்றாக இருக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்துக் கொள்ளுங்கள் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்தவுடன் மீதமிருக்கும் அரை ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து சின்ன வெங்காயம் போட்டு கருவேப்பிலை இலை தூவி நன்றாக வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு வேக வைத்த பூசணிக்காய் இதில் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு பூசணிக்காய் வேக வைத்த தண்ணீரை இதில் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கொதித்தாலே போதும். இப்போது அடுப்பை அணைத்து விட்ட பிறகு அறைத்து வைத்த தேங்காய் விழுது மசாலாவை இதில் சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: காலிஃப்ளவர் வாங்கினா ஒரு முறை, தேங்காய் இல்லாமல் இப்படி கிரேவி செய்து பாருங்கள். இதன் சுவைக்கு கறி குழம்பு தோற்றுப் போகும்.

குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் போது இதை ஊற்றினால் குழம்பு திரிந்து விடும் அதன் சுவையும் மாறிவிட வாய்ப்பு உண்டு. இதை ஊற்றி கிளறிய பிறகு 10 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். குழம்பு நன்றாக சூடு ஆறிய பிறகு அரை லிட்டர் தயிரை நன்றாக கட்டிகள் இல்லாமல் அடித்து இந்த குழம்பில் ஊற்றினால் அருமையான தயிர் குழம்பு ரெடி.

சற்று முன்