- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்டீ போட்டு குடிக்கிறது எல்லாம் ஒரு விஷயமான்னு கேட்கிறவங்க, இந்த புதினா சேர்த்த மசாலா...

டீ போட்டு குடிக்கிறது எல்லாம் ஒரு விஷயமான்னு கேட்கிறவங்க, இந்த புதினா சேர்த்த மசாலா டீயை ஒரு முறை குடிச்சு பாருங்க. அதன் பிறகு நீங்களே சொல்லுவீங்க இப்படி ஒரு டீ குடிக்கிறது பெரிய விஷயம் தான்னு.

- Advertisement -

டீ குடிப்பது என்பது நாம் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விஷயமே கிடையாது . காலையில் எழுந்தவுடன் நாம் குடிக்கும் அந்த முதல் பானமான டீ யில் தான் அன்றைய நாளே நமக்கு தொடங்குகிறது. அந்த டீ ருசியாகவும், மணமாகவும் இருந்தால் அத்துடன் சேர்ந்து நாம் மனதும் உற்சாகமாக மாறி அன்றைய நாள் முழுவதுமே சுறுசுறுப்புடன் பணியாற்ற அந்த காலையில் பருகும் முதல் டீ நிச்சயம் காரணமாக இருக்கும். இப்படி காலை எழுந்தவுடன் முதல் முதலில் அறிந்தும் ஒரு டீ சுவையுடன் சேர்த்து அந்த நாள் முழுவதும் நம்மை உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்கும் படி குடித்தால் என்னும் எத்தனை அருமையாக இருக்கும். அப்படி ஒரு டீ தயாரிக்கும் பதிவுதான் இது.

புதினா டீ தயாரிக்க தேவையான பொருள்: பட்டை – 25 கிராம், ஏலக்காய் – 15, சுக்கு – 25 கிராம், கிராம்பு -50 கிராம், மிளகு 25 கிராம், புதினா – 1 கட்டு.

- Advertisement -

முதலில் புதினாவை காம்புகள் இல்லாமல் இலைகளை மட்டும் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் சுத்தமாக காய்ந்த பிறகு புதினா இலைகளை, அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன் வைத்து சூடானதும் அதில் இந்த இலைகளை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். நாம் வறுக்கும் பக்குவமே இலை வெயிலில் காய வைத்தது போல் வர வேண்டும். வறுத்த பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி அப்படியே ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதே பேனில் எடுத்து வைத்த மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கொட்டி, லோ ஃபிளேமில் வைத்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். மசாலா பொருட்கள் கரிந்து விடக் கூடாது கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். கரிந்து விட்தால் டீ கசப்பாக மாறி விடும். எனவே லோஃபிளேமில் வைத்து நல்ல மிதமான தீயில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வறுத்த மசாலா பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைத்த பிறகு ஆற வைத்த புதினா தழைகளையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில்சுக்கு போன்ற பொருட்கள் சேர்த்து இருப்பதால் மிகவும் பைன் பேஸ்டாக வராது கொஞ்சம் கொரகொரப்பாக தான். நீங்கள் அப்படியே அரைத்து எடுத்து ஒரு காற்று போகாத பாக்ஸ் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதை வைத்து டீ எப்படி போடுவது என்று பார்த்து விடுவோம். முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரண்டு டீஸ்பூன் டீ தூள் இது இரண்டு பேர் குடிப்பதற்கான அளவு ஒரு டீஸ்பூன் அளவு அரைத்து வைத்த மசாலா பவுடர் சேர்த்து நன்றாக கிலோ பிலிமில் வைத்து கொதிக்க வைத்து வைத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு ஒரு டம்ளர் அளவிற்கு பால் ஊற்றிக் கொள்ளுங்கள். டீ யை பொருத்தவரையில் பாலின் அளவு தண்ணீர் அளவு சரியாக இருந்தால் தான் டீ நன்றாக இருக்கும். காபிக்கு தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது, டீக்கு தண்ணீர் கொஞ்சம் அதிகமாக தான் இருக்க வேண்டும். இப்போது பால், டீ தூள், மசாலா அனைத்தும் ஒன்றாக கலந்த பிறகு நன்றாக கொதிக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி கொடுத்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க கிட்ட இந்த ஒரு குழம்பு தூள் இருந்தா போதுங்க, சைவம், அசைவம், எதுன்னாலும் டக்குனு சமைச்சி முடிச்சிடலாம். அப்புறம் உங்க சமையலுக்கு வீட்டில் தினமும் பாராட்டு மழை தான் போங்க.

இந்த மழைக்காலத்தில் குடிக்க இதைவிட ஒரு அருமையான டீயை இதற்கு முன் நீங்கள் உசுப்பி இருக்கவே மாட்டீர்கள்.

சற்று முன்