உங்க கிட்ட இந்த ஒரு குழம்பு தூள் இருந்தா போதுங்க, சைவம், அசைவம், எதுன்னாலும் டக்குனு சமைச்சி முடிச்சிடலாம். அப்புறம் உங்க சமையலுக்கு வீட்டில் தினமும் பாராட்டு மழை தான் போங்க.

- Advertisement -

சமையலில் நாம் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி நாம் கற்றுக் கொண்டு விதவிதமாக சமைத்தாலும் கூட ஏதாவது குறை இருப்பது போலவே உங்களுக்கு தோன்றினால், உங்கள் சமையல் செய்யும் விதத்தில் எந்த குறையும் இல்லை நீங்கள் சமைக்கும் பொருளில் சேர்க்கும் மசாலாக்களில் அரைக்கும் விதத்தை கொஞ்சம் மாற்றி பாருங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் செய்யும் எந்த குழம்பு, பொரியல் எதுவாயினாலும் அதன் வாசமே வீட்டில் உள்ளவர்களை சாப்பிட அழைத்து விடும். அந்த அளவிற்கு சுவையும் மனமும் தரக்கூடிய ஒரு தூளை தான் எப்படி அரைப்பது என்று இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: வெந்தயம் – 50 கிராம், மிளகு -50 கிராம், சீரகம் -100 கிராம், துவரம் பருப்பு – 100 கிராம், மஞ்சள் -50 கிராம், தனியாக -1 கிலோ, மிளகாய் -1 கிலோ.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து அடி கனமான ஒரு பேனை வைத்து அதில் முதலில் வெந்தயத்தை சேர்த்து கொஞ்சம் நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். மசாலாக்களை வறுக்கும் போது அடுப்பை லோ ப்ளேமில் தான் வைத்திருக்க வேண்டும் ஹை ஃபிளைமில் வைக்கக்கூடாது.

அதன் பிறகு மிளகு, சீரகம், தனியா, தூரம் பருப்பு, இப்படி ஒவ்வொன்றாக போட்டு தனித்தனியாக வறுத்து எடுத்து ஒரு பெரிய தட்டில் வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதில் மிளகாய் மட்டும் நல்ல வெயிலில் ஒரு நாள் காய வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் தூள் அதிகமாக கிடைக்கும் அது மட்டும் இன்றி அதிக நாள் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

- Advertisement -

இது போன்ற மழை நாட்களில் வெயில் இருக்காது காய வைக்கவும் முடியாது. அதற்கு இதே போல் அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மிளகாய் சேர்த்து கருகி விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளலாம். வறுக்கும் போது கொஞ்சம் கல் உப்பு போட்டு வறுத்து கொள்ளுங்கள். இதனால் மிளகாய் அத்தனை சீக்கிரம் கருகாது அதே நேரத்தில் மிளகாய் நெடி யும் வராது.

இதற்கு கொம்பு மஞ்சள் என்று சொல்லுவார்கள் அந்த மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள் அதையும் காய வைத்து கொள்ளுங்கள் வறுக்க தேவையில்லை.

- Advertisement -

இப்படி தனித்தனியாக வறுத்து நன்றாக ஆற வைத்து கடையில் கொடுத்து அரைத்து எடுத்து வந்த பிறகு அதை முதலில் ஒரு பேப்பர் அல்லது தட்டு போட்டு அரைத்த மசாலாக்களை அதில் கொட்டி நன்றாக ஆற விடுங்கள். கடையில் கொடுத்து அரைத்து தூளை அப்படியே நீங்கள் எடுத்து வைத்தால் அரைத்த உடன் தூள் அனைத்தும் மிஷின் சூட்டில் இருக்கும் அப்படியே இருக்கும் போது அதிலிருந்து நீர் விட்டு தூள் சீக்கிரம் கெட்டு விடும். எனவே அரைத்து வந்த பிறகு தூளை கட்டாயமாக தனியாக கொட்டி ஆற வைத்து அதன் பிறகு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். ஆறு மாதமானால் கூட இந்த தூள் கெட்டுப் போகவே செய்யாது.

இதையும் படிக்கலாமே: பிரியாணியே தோத்து போற அளவுக்கு சும்மா கமகமன்னு பாய் வீட்டு வெள்ளை குஸ்கா குக்கர்ல இவ்வளவு ஈஸியா செய்யலாம் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீங்க தான். வாங்களேன் ட்ரை பண்ணி தான் பாப்போம்

இந்தத் தூள் இருந்தால் போதும் நீங்கள் இதற்கான தனி மிளகாய், தூள் தனியா தூள், என எதையும் குழம்பில் தனியாக சேர்க்க வேண்டாம். அசைவை குழம்பு சமைத்தாலும் சரி, சைவ குழம்பு சமைத்தாலும் சரி இந்த ஒரு தூள் இருந்தால் போதும் உங்கள் சமையல் மணக்கும்.

- Advertisement -