UIDAI : அலுவலக உதவி இன்றி இ – ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறை – இதோ முழுமையாக

Aadhar
- Advertisement -

ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமகனின் முக்கியமான அடையாளச்சான்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் கார்டினை பெபட முன்பெல்லாம் அலுவலக உதவியினை நாடவேண்டி இருந்தது. மேலும் ஒரு சின்ன திருத்தங்களுக்கு கூட ஆதார் அலுவலகம் சேலை வேண்டி இருந்தது. தற்போது அதனை எளிமையாக்கும் பொருட்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் எளிமையாக ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்யும் வழிமுறையினை தற்போது வெளியிட்டுள்ளது.

AadharCard

ஆதார் கார்டில் உங்களது பெயர், வயது, பாலினம், முகவரி முதல் உங்கள் கைரேகை மற்றும் புகைப்படம் என அனைத்தும் இருக்கும் எனவே இந்த ஆதார் கார்டின் எண்ணை வங்கி கணக்கு மாற்றும் மொபைல் நம்பருடன் இணைப்பது இன்று அவசியமாகி இருக்கிறது. சரி நாம் ஆதார் கார்டினை எளிமையாக பதிவிறக்கம் செய்யும் வழிமுறையை பார்க்கலாம்.

- Advertisement -

1 – https://uidai.gov.in/ குறிப்பிடப்பட்டுள்ள இந்த இணையதள முகவரிக்கு செல்லவும்.
2- பிறகு Download Aadhar என்ற பகுதிக்கு சென்று Get Aadhar எனும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3- அதில் உங்களது 12 இலக்க ஆதார் பயோமெட்ரிக் நம்பரை பதிவிடவும்.
4- பிறகு Send OTP என்ற பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
5- பிறகு Quick Survey என்ற பகுதியில் கேட்கப்படும் கேள்விகளை நிரப்பவும்.
6- எல்லாம் முடிந்த பிறகு Verify and Download என்ற பட்டன் அந்த பக்கத்தின் கீழே இருக்கும். அதனை கிளிக் செய்தால் இ- ஆதார் தயார்.

Aadhar 1

இதுவே இணையதள வழியாக ஆதார் கார்டினை பெரும் எளிமையான வழியாகும். இந்த 6 ஸ்டெப்ஸ் பின்பற்றினால் யாருடைய உதவியுமின்றி நீங்களே உங்களது ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இது பயனுள்ள தகவல் எனவே மற்ற நண்பர்களும் இதை பகிர்வோம் விரைவாக. நன்றி.

- Advertisement -