Flipkart ல் இனி உணவும் கிடைக்கபோகிறதா? வாடிக்கையாளர்கள் குஷி

Flipkart
- Advertisement -

இந்தியாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களில் ஒன்று பிளிப்கார்ட். இந்நிறுவனம் இதுவரை ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல ஆஃபர் மூலம் பல பொருட்களை இணையதளம் மூலமாக வழங்கி வருகிறது. இவர்களின் சிறப்பான சேவை காரணமாக பிளிப்கார்ட்க்கு ஏகப்பட்ட வாடிகையாள்கள் இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை என்றே கூறலாம்.

Flipkart

இதுவரை அவர்கள் உணவுப்பொருளை தவிர்த்து உடை, ஆபரணம், செல்போன், டிவி என அனைத்து எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விநியோகித்து வந்தனர். இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் உணவுப்பொருட்களையும் சில்லரை முறையில் விற்பனை செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் இதற்காக தனியாக ஒரு புதிய நிறுவனம் ஒன்றை அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதன்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சில்லறை விற்பனைக்காக பிலிப்கார்ட் ஃபார்மர்மார்ட் எனும் தனி நிறுவனம் ஒன்றை அவர்கள் புதிதாக துவங்கி அதனை முறைப்படி பதிவும் செய்துள்ளனர்.

Flipkart

பிளிப்கார்ட் நிறுவனம் இந்த புதிய நிறுவனம் மூலமாக உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உரிமம் கோரி தற்போது விண்ணப்பிக்க தயாராக உள்ளது. மேலும் இந்த சில்லறை விற்பனை ஆன்லைன் மூலமாகவும் மற்றும் பிளிப்கார்ட் ஸ்டோர் மூலமாகவும் இரு முறைகளில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 1845 கோடி ரூபாய் என அந்த நிறுவனத்தின் தலைமையிலிருந்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற பிளிப்கார்ட் நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்த புதிய நிறுவனத்தை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Flipkart

அதில் இந்த நிறுவனம் தொடங்க அனுமதி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய இருக்கும் அந்த தகவலையும் அவர்கள் நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்கள். மேலும் இந்த சில்லரை விற்பனைக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்டோர்கள் என இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சேவை மையங்களை பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -