UIDAI: அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டை வாங்குவதற்கான எளிய வழிமுறைகள் இதோ

Aadhar
- Advertisement -

ஆதார் கார்டு தற்போது இந்திய நாட்டின் ஒரு முக்கிய அடையாளச்சான்றாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அதற்கான முக்கியத்துவம் இந்தியாவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டினை பெற பயனாளர்கள் முன்பெல்லாம் அதற்க்காக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றே பெறவேண்டிய நிலை இருந்தது. அனால், அந்த கஷ்டத்தை நீக்க எளிய வழிமுறை வந்துவிட்டது. ஆன்லைன் மூலம் எளிமையாக ஆதார் கார்டினை பெற கீழ் வருவனவற்றை செய்தால் போதும்.

AadharCard

ஆதார் கார்டு வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் ஆதார் கார்டினை பெறும் விண்ணப்பத்தினை https://uidai.gov.in/images/aadhaar_enrolment_correction_form_version_2.1.pdf இந்த இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

- Advertisement -

பிறகு, அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நிரப்பவும். அதன் பின்னர் அருகில் உள்ள ஆதார் பதிவு செய்யும் மையத்திற்கு சென்று அதனை ஒப்படைக்கவேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் அடையாள சான்றிதழ் மட்டும் அனைத்து விடயங்களையும் சரியாக கூறுங்கள். பிறகு அங்கேயே உங்களது கைரேகை மற்றும் கண் கருவிழி ஆகியவை ஸ்கேன் செய்யப்படும் .

Aadhar 1

அதன் பிறகு அந்த மையத்தில் 14 இலக்க பயோமெட்ரிக் நம்பர் ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். அந்த நம்பரை உபயோகித்து நீங்கள் ஆதார் கார்டு தயாரானதும் ஆன்லைன் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -