Aadhar card : ஆதார் கார்டில் உள்ள போட்டோவை நீங்களே மாற்றுவது எப்படி | UIDAI

Aadhar
- Advertisement -

ஆதார் அட்டை என்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒரு ஆவணமாக மாறிவிட்டது. அதில் ஒரு தனி நபர் குறித்த பெயர், முகவரி போன்றவை மட்டும் அல்லாமல் பயோமெட்ரிக் டேட்டாவும் அடங்கியுள்ளது. வங்கி கணக்கில் இருந்து, சிம் கார்டு வாங்குவது வரை இன்று அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை தேவைப்படுகியது.

AadharCard

சில சமயங்களில் சில காரணங்களுக்காக ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றவேண்டும் என்று சிலர் எண்ணுவதுண்டு. அந்த வகையில் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை நீங்களே மாற்றக்கூடிய இரு வழிமுறைகளை பற்றி இனி காண்போம் வாருங்கள்.

- Advertisement -

வழிமுறை ஒன்று:

* அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
* அங்கு அதிகாரபூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து, ஒரு படிவம் டவுன்லோட் செய்யப்பட்டு உங்களிடம் தரப்படும்.
* அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து தரவும்.
* உங்களுடைய பயோமெட்ரி தகவல்களை அங்குள்ள அதிகாரிகள் உங்களிடம் இருந்து பெறுவார்கள்.
* அதோடு உங்களுடைய தெளிவான புகைப்படம் ஒன்றும் அங்கேயே எடுக்கப்படும்.
* இதற்க்கு கட்டணமாக ரூ.25 + ஜி.எஸ்.டியை செலுத்த வேண்டும்.
* அதன் பிறகு ஆதார் விவரங்களை மாற்றம் செய்வது தொடர்பான URN அடங்கிய ஆவணம்(acknowledgement slip) உங்களிடம் அளிக்கப்படும்.

- Advertisement -

Aadhar 1

வழிமுறை இரன்டு:
சிலர் ஆதார் மையத்திற்கு சென்று ஆதார் விவரங்களை மாற்றம் செய்ய விரும்பமாட்டாரகள். அது போன்ற சூழலில் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேறொரு வழிமுறையும் உள்ளது.

* ஆதார் அட்டையின் விவரங்களை மாற்றம் செய்வதற்கான படிவத்தை அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.
* அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவேண்டும்.
* நீங்கள் விரும்பும் ஒரு புகைப்படத்தை அரசு அதிகாரி ஒருவரின் கையொப்பத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

UIDAI Regional Office,
Khanija Bhavan,
No.49, 3rd Floor,
South Wing Race Course Road,
Bangalore – 560 001

விண்ணப்பித்த ஒரு மாத காலத்திற்குள் உங்கள் ஆதார் அட்டையின் புகைப்படம் மாற்றப்படும். அதன் பிறகு அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து உங்களுடைய ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதற்க்கு எந்த தொகையும் பெறப்படாது.

- Advertisement -