ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும் அல்லது திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதம் என்றதும் நம் நினைவிற்கு வருவது அம்மன்தான். ஆடி மாதம் அம்மனை வழிபடாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அம்மனுக்குரிய மாதமாக திகழக்கூடிய ஆடி மாதத்தில் நாம் என்ன பரிகாரம் செய்தால் குலதெய்வம் வீடு தேடி வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி 1ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம்
ஆடி மாதம் என்றதும் நம் நினைவிற்கு வருவது அம்மன் ஆலயங்கள் தான். அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு பிடித்தமான அனைத்து விதமான செயல்களையும் செய்வார்கள். பல ஆலயங்களில் ஆடி மாதத்தில் கூழ் ப
வார்க்கும் பழக்கம் உள்ளது. அதேபோல் பல ஆலயங்களில் ஆடி மாதத்தில் திருவிழாக்கள் நடைபெறும். பூக்குழி மிதித்தல், கரகம், பூத்தட்டு என்று பல திருவிழாக்கள் நடைபெறும். அவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய குலதெய்வத்தை நம் வீட்டிற்கே அழைத்து வரும் என்று கூறப்படுகிறது.
குலதெய்வம் யாருடைய வீட்டிலும் நிரந்தரமாக இருக்காது. நாம் வீட்டிற்கு அழைத்து வந்தாலும் நம்மைப் போல் பிறர் வேண்டும் பொழுது அவர்களின் குறைகளை தீர்ப்பதற்காக போய்விடுவார்கள். அதனால் தான் தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி தினமும் நாம் வழிபாடு செய்தால் தான் நம்மை அனுதினமும் நினைக்கிறார்கள் என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் குலதெய்வம். அப்படி ஆடி மாதம் 1ஆம் தேதி நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.
இதற்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. அம்மனுக்கு மிகவும் பிடித்தமான வேப்பிலை ஒன்று இருந்தால் போதும். ஆடி மாதம் 1ஆம் தேதி ஜூலை 17ம் தேதி பிறக்கிறது. அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேப்பிலையை எடுத்து வந்து உங்கள் வீட்டு நிலை வாசலில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். வேறு எதுவுமே செய்ய வேண்டாம். இப்படி நீங்கள் வைத்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வருவதோடு மட்டுமல்லாமல் அந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: திருமாங்கல்யத்தில் கோர்க்க வேண்டிய பொருட்கள்
சாதாரண ஒரு வேப்பிலைக்கு இவ்வளவு மகிமையா என்று யோசிக்காதீர்கள். இந்த வேப்பிலை அம்மனின் அம்சம் பொருந்தியதாக திகழக்கூடியது என்று ஒரு புறம் ஆன்மீக ரீதியாக நாம் நினைத்தாலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை தந்து கிருமிகளை அழிக்கக்கூடிய ஒன்றாக மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அதனால் எந்த வித தயக்கமும் இல்லாமல் வேப்பிலையை நம்முடைய வீட்டில் வைத்து குலதெய்வத்தின் அருளையும் அதேசமயம் உடல் ஆரோக்கியத்தையும் பெற்று நலமுடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.