நாளை ஆடி 18. இந்த நன்னாளை ஆடிப்பெருக்கு என்று சொல்லுவார்கள். பெருக்கு என்றால் பல மடங்காக பெருகுவது. நாளை ஆடை 18-ஆம் தேதி நம்முடைய வீட்டின் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளைப் பற்றியும், தாலி சரடு மாற்ற வேண்டிய நல்ல நேரத்தை பற்றிய தகவலையும், நாளை வழிபாட்டின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரத்தையும் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஆடிப்பெருக்கு என்றாலே நாம் நினைவுக்கு வருவது காவிரி. காவிரி அன்னைக்கு நன்றியை தெரிவிக்க கூடிய நாள் தான் இந்த ஆடிப்பெருக்கு. நீரின்றி அமையாது உலகம் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட நீருக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய நாள். விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க கூடிய நாள் இந்த ஆடி 18.
ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறை
காவிரி கரையோரம் வாழக்கூடிய மக்களுக்கு இந்த நாள் ஒரு திருவிழா என்றே சொல்லலாம். நதிகளில் நீர் ஓடி வரக்கூடிய இடங்களில் இருக்கும், கரையோரங்களில் வாழும் மக்கள் எல்லோருமே அந்த நீர் நிறைகளுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். ஆத்தங்கரையில் அமர்ந்து விளக்கு ஏற்றி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, பிரசாதங்களை செய்து வைத்து, கூடவே மங்கள பொருட்களையும் வைத்து வழிபாட்டை மேற்கொண்டு, புதுமண தம்பதிகள் நாளைய தினம் மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்ளும் வழக்கத்தை வைத்திருப்பார்கள்.
காவிரி கரையோர மக்கள் இப்படி காவிரி தாயை நேரில் சென்று தரிசனம் பெற்றுக் கொள்ளலாம். காவிரி தாயின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் காவிரி தாயை நாளைய தினம் நேரில் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது?
பூஜை அறையிலேயே ஒரு கலசத்தில் சுத்தமான தண்ணீர் ஒரு சிட்டிகை மஞ்சள், கொஞ்சம் பூ போட்டு வைக்கவும். காவிரி தாயை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து அதற்கு குங்குமப்பொட்டு வைத்து, உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திரு உருவப்படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். பிறகு நம்முடைய வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் தண்ணீருக்கு நன்றியை சொல்லுங்கள். அந்த கலசத்தை உள்ளங்கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சன்னிதிம் குரு
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகள் இந்த தீர்த்தத்தில் எழுந்தருளி ஆசிகளை தர வேண்டும் என்பது இந்த மந்திரத்தினுடைய பொருள். மேல் சொன்ன முறைப்படி வழிபாட்டை மேற்கொண்டால் அந்த கங்காதேவியின் ஆசிர்வாதம் நம்முடைய குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் நம்முடைய வாழ்வாதாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை. பொருளாதாரம் மேலோங்கும். செல்வ செழிப்பு உயரம்
வழிபாட்டை முடித்துவிட்டு அடுத்த நாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து, கலச தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். மீதம் இருக்கும் தண்ணீரை செடிகொடிகளுக்கு ஊற்றி விடுங்கள். வீட்டிலிருந்தபடியே ஆடி 18 வழிபாட்டை இப்படித்தான் மேற்கொள்ள வேண்டும். நாளைய தினம் இப்படி காவிரி தேவியை நினைத்து வழிபாடு செய்வதன் மூலம் நாம் என்ன நல்ல விஷயங்களை எல்லாம் வேண்டிக் கொண்டோமோ, அதெல்லாம் பல மடங்காக பெருகும் என்பதை நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நல்ல நாளில் காவிரி தாயை வழிபட நாம் மறக்கக்கூடாது.
அதை உங்களுக்கு நினைவு கூர்ந்து இந்த நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம். சரி, நாளைய தினம் தாலி கயிறு மாற்றுவதற்கான நல்ல நேரத்தையும் நான் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.
தாலிக்கயிறு மாற்ற வேண்டிய நல்ல நேரம்
ஆகஸ்ட் 3 2024 சனிக்கிழமை ஆடிப்பெருக்கு வரவிருக்கின்றது. நாளை காலை 7:35 மணியிலிருந்து 8:50 மணி வரை நல்ல நேரம். அதை தவறவிட்டவர்கள் காலை 10:35 மணியிலிருந்து 11:55 மணி வரை தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம். கூடுமானவரை காலை 8:50 மணிக்குள் தாலி சரடு மாற்றிக் கொள்வது மிக மிக நல்லது. காலைப் பொழுதில் சரடு மாற்ற வேண்டும்.
பொழுது சாயும் தருணத்தில் தாலி சரடு மாற்றக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். புதுமண தம்பதிகள் தாலி சரடை பெரியவர்கள் முன்னிலையில் மாற்றிக் கொள்ளவும். மற்றபடி தாலி சரடு மாற்றம் வேண்டும் என்ற அவசியத்தில் இருப்பவர்கள் நாளைய தினம் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம். ஆடி18 சனிக்கிழமையில் வந்திருக்கிறது என்ற கவலை எல்லாம் யாருக்கும் தேவையில்லை.
இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்கவும் பணவரவு அதிகரிக்கவும் விநாயகர் வழிபாடு
ஆடி18 எந்த கிழமையில், எந்த நாளில், எந்த திதியில் வந்தாலும் அந்த நாளில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் தாலி சரடு புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆடி 18க்கு எந்த தோஷமும் கிடையாது. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் எல்லோருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.