- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி அமாவாசையில் செய்யக்கூடாத காரியங்கள்

ஆடி அமாவாசையில் செய்யக்கூடாத காரியங்கள்

- Advertisement -

முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய நாளாக தான் அமாவாசை திகழ்கிறது. அதிலும் ஆடி மாதம் என்று கூறக்கூடிய தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் பலரும் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று தர்ப்பணம் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக ஆலயம் செல்வார்கள். இன்னும் சிலரோ குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதற்காக குலதெய்வ கோவிலுக்கு செல்வார்கள். இப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆடி அமாவாசை நாளன்று கோவிலுக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத சில காரியங்கள் இருக்கின்றன. அந்த காரியங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி அமாவாசை வழிபாடு

சிறப்பு மிகுந்த நாட்கள் என்று பல நாட்கள் வரும். அந்த நாட்களில் செய்ய வேண்டிய காரியங்கள் என்று சில காரியங்கள் இருக்கும். அந்த காரியங்களை நாம் செய்யும்பொழுது நம்முடைய குடும்பத்திற்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அதே போல் தான் செய்யக்கூடாத காரியங்கள் என்று சில காரியங்கள் இருக்கும். அந்த காரியங்களை நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பொழுது அதனால் நம் குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள் உண்டாகும். அந்த வகையில் தான் ஆடி அமாவாசை தினத்தில் கோவிலில் செய்யக்கூடாத சில காரியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஆடி அமாவாசை நாளன்று பலரும் முன்னோர்களை வழிபாடு செய்வதற்காக பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள், பலவிதமான பொருட்களை வாங்குவார்கள், தானம் செய்வார்கள். இப்படி நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதற்காக பிறரிடம் இருந்து கடன் வாங்க கூடாது. அதாவது ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தில் எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்காக கடன் வாங்க கூடாது. அப்படி வாங்கினோம் என்றால் நம்மால் கடனிலிருந்து வெளியே வரவே முடியாது.

அதேபோல் ஆலயத்திற்கு செல்பவர்கள் ஆலயத்தில் என்னென்ன வழிபாடுகளை செய்யப் போகிறீர்களோ அதற்கு தேவையான அனைத்தையும் தங்கள் கைப்பட வாங்கிக் கொண்டு செல்ல வேண்டுமே தவிர அங்கு இருப்பவர்களிடம் கடனாக வாங்கியோ இரவலாக எந்த பொருளையும் வாங்கி செய்யக்கூடாது உதாரணமாக தீபம் ஏற்றுவதற்கு தீப்பெட்டி வாங்குவது போன்றவை.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் நாம் தெய்வ வழிபாட்டிற்காக ஆடி அமாவாசை நாளன்று ஆலயத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக முறையில் தீபம் ஏற்றுவோம். அவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது பிறர் ஏற்றிய தீபத்தில் இருந்து தீபம் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றுவதனால் எந்த வித பலனும் நமக்கு கிடைக்காது.

அதேபோல் பலரும் ஆலயத்திலிருந்து தெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு ஆலயத்திலிருந்து வீடு திரும்பும் பொழுது யாசகம் கேட்பவர்களுக்கு தானமாக பணத்தை தருவார்கள். அவ்வாறு பணத்தை தரக்கூடாது. தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பும் பொழுது நாம் அன்னதானத்தை மட்டும் தான் செய்ய வேண்டும். பண தானத்தை செய்யக்கூடாது. மேலும் ஆலயத்தில் தெய்வ தரிசனம் செய்து முடித்த பிறகு நேராக வீட்டிற்கு வரவேண்டும். வேறு எங்கும் செல்லக்கூடாது .

இதையும் படிக்கலாமே: முன்னோர்கள் அருளை பெற ஏற்ற வேண்டிய தீபம்

இந்த செயல்களை நினைவில் வைத்துக் கொண்டு ஆடி அமாவாசை நாளன்று நாம் சரியாக பயன்படுத்தினோம் என்றால் நம் வாழ்வில் எந்தவித கஷ்டங்களும் வராது. நன்மைகள் மட்டுமே உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்