ஆடி வெள்ளியில் இந்த 3 விஷயத்தை செய்ய மறக்காதீர்கள்! கெட்டது நீங்கி நன்மைகள் பெருகும்.

- Advertisement -

ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்கு உரிய மாதமாக இருந்து வருகிறது. மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆடி மாதம் அம்மனுக்கு மிகுந்த விசேஷமான பூஜைகள் செய்யப்படுவது உண்டு. ஆடி மாதத்தில் இறைவழிபாடுகளை மேற்கொள்வது என்பது குடும்பத்திற்கும் நன்மைகளை வாரி வழங்கும் செயலாகும். ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளியிலும் தவறாமல் இந்த மூன்று விஷயங்களை கடைப்பிடித்து வந்தால் கெட்டது நீங்கி நன்மைகள் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு, அதை பற்றி ஆன்மீக தகவல்களாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சுபகிருது ஆண்டின் ஆடி மாதம் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பித்து அனைத்து வெள்ளிக்கிழமையும் கண்டிப்பாக மறக்காமல் இந்த மூன்று விஷயங்களை கடைபிடித்து வந்தால் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகி, நமக்கு வரக்கூடிய நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் கண்டிப்பாக வீட்டில் தோரணங்கள் கட்டப்படுவது வழக்கம்.

- Advertisement -

ஆடி மாதத்தில் தலை வாசலில் எப்பொழுதும் வேப்பிலை தோரணம் கட்டுவது, மாவிலை தோரணம் கட்டுவது போன்றவற்றை செய்ய வேண்டும். காற்றில் பரவக்கூடிய தொற்று கிருமிகள் ஆடி மாதத்தில் அதிகரித்து காணப்படும். இதனால் வீடு தோறும் மற்றும் ஊர் முழுவதும் ஆங்காங்கே மாவிலை தோரணம், வேப்பிலை தோரணம் கட்டி தொங்க விடுவார்கள். இதனால் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் வருவது குறையும் என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது.

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது ஒரு அர்த்தம் ஒளிந்து கொண்டிருக்கும். அறிவியல் ரீதியாக ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும் எனவே ஆடி மாதத்தில் கண்டிப்பாக வீட்டில் மாவிலை தோரணம், வேப்பிலை தோரணம் போன்றவற்றை கட்டி தொங்க விடுங்கள். இதனால் கண்ணுக்கு தெரியாத நன்மைகள் நமக்கு வந்து சேரும்.

- Advertisement -

அதே போல ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வீடு முழுவதும் இந்த ஒரு நீரை கொண்டு துடைத்து எடுங்கள். இதனால் வீட்டில் நுண்கிருமிகள் வசிக்காது. மேலும் எதிர்மறை சக்திகள் நீங்கி, தெய்வ சக்தி அதிகரிக்க துவங்கும். வீட்டில் நுன்கிருமிகள் இல்லாமல் இருக்க, நீங்கள் வீட்டை துடைக்கும் தண்ணீருடன் சிறிதளவு கல் உப்பு மற்றும் நாலைந்து வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் எப்போதும் போல வாசனை திரவியங்களை சேர்த்து வீட்டை துடைத்து பாருங்கள். வீட்டில் இம்மி அளவும் கிருமிகள் இன்றி நல்ல ஒரு தெய்வீக சக்தியை உணர்வீர்கள். இதனால் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களும், தீராத குழப்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அதே போல மூன்றாவதாக ஆடி மாத வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக அம்மனுக்கு ஏலக்காய் மாலை அல்லது கிராம்பு மாலை கோர்த்து சாற்றுங்கள். நெய் தீபம் ஏற்றி உங்களால் முடிந்த இனிப்பு வகைகளை நைவேத்தியம் படைத்து வழிபடுங்கள். அன்றைய நாளில் மற்ற விஷயங்களை தானம் கொடுக்காவிட்டாலும், அன்னத்தை கண்டிப்பாக தானம் செய்யுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு இல்லாதவர்கள் அல்லது இயலாதவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது அல்லது வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய பாவங்கள் பன்மடங்கு குறைந்து புண்ணிய பலன் இரட்டிப்பாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமையில் தவறாமல் இந்த மூன்று விஷயங்களை செய்து பயனடையுங்கள்.

- Advertisement -